இண்டர்நெட் மோசடி: திருப்பூர் வாலிபர் கைது
சென்னை:
காதல் இணையதளம் அமைத்து லட்சக்ணக்கில் பணம் சுருட்டிய திருப்பூர் வாலிபர்கைது செய்யப்பட்டார்.
காதலர்களை இணைக்க இண்டர் நெட்டில் தனியாக காதல் இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. இதை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் நடப்பதுண்டு.கடந்த சில மாதங்களுக்கு முன் கோவையை சேர்ந்த ஊனமுற்ற பெண் ஆசின்போட்டோவை தனது எனக்கூறி பல லட்சம் மோசடி செய்தார். பல மாதங்களுக்குபிறகு விசாரணையில் மோசடி செய்த பெண் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது அந்த வகையில் திருப்பூரை சேர்ந்த நிருபர் ஒருவரின் மகன் ஆன்லைனில்மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் பாப்பா நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). பிளஸ் 2 வரை படித்த இவர்"தோஸ் டாட் காம் என்ற இணைய தளத்தை தொடங்கினார். இதில் காதலர்கள்,நண்பர்களும் தங்கள் அன்பை பறிமாறிக் கொள்ளலாம் எனவும், இதில்உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவித்தார்.
ஆனால் உறுப்பினர்களாக சேர்பவர்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் தங்கள்கிரெடிட் கார்டுகளின் விபரத்தை இதில் தெரிவிக்க வேண்டும் என அறிவித்திருந்நதார்.
இதன் சூட்சுமம் அறியாதவர்கள் கிரேட் கார்டுகளின் எண்களை இணையத் தளத்துக்குஅனுப்பி வைக்கவே, அதைப் பயன்படுத்தி பண மோசடி செய்து வந்துள்ளார் மோகன்ராஜ். பிறரது கிரெடிட் கார்ட் எண்களைப் பயன்படுத்தி பல லட்சங்களைசுருட்டியுள்ளார்.
ஒரு நிறுவனத்திடம் ஆன் லைனில் ரூ. 1 லட்சத்துக்கு செல்போன்களை வாங்கினார்மோகன் ராஜ். அப்போது அவர் பல கிரெடிட் கார்டுகளின் எண்களைப்பயன்படுத்தவே சந்தேகமடைந்த நிறுவனம் போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்விசாரணை நடத்தி வந்தனர்.
உதவி கமிஷனர் பாலு தலைமையிலான போலீசார் திருப்பூர் சென்று மோகன்ராஜைகைது செய்தனர். அவரிடமிருந்து விலை உயர்ந்த செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications