காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ரெடி!
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தயாராகி விட்டதாக தெரிகிறது. ஏப்ரல் 5ம்தேதி டெல்லியில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டன.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் 5ம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் தயாராகி விட்டதாகதெரிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கானவேட்பாளர்களை தேர்வு செய்ய டெல்லியில் தேர்வுக் குழு கூடி விவாதித்து வந்தது.
வீரப்ப மொய்லி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தமிழககாங்கிரஸின் பல்வேறு கோஷ்டியினரும் தங்களுக்கு தேவையான தொகுதிகளைக்கோரி மொய்லியை மொய்த்து வருகின்றனர்.
அனைத்து கோஷ்டிகளும் முக்கியமான தொகுதிகளை கேட்டு நச்சரித்து வருவதால்அதிருப்தி அடைந்த வீரப்ப மொய்லி, அனைவரும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும், கோஷ்டிப் பூசலில் ஈடுபட வேண்டிய நேரம் இதுவல்ல,வெற்றிதான் முக்கியம் என்று அனைத்துத் தலைவர்களிடம் கண்டிப்பாக கூறினார்.
இருப்பினும் தொடர்ந்து ஆளாளுக்கு தொகுதிகளைக் கேட்டு அணத்தியதால்சோனியா காந்தி வரை ஆலோசனை நீண்டது. நேற்று 2வது முறையாக ஆலோசனைநடந்தது. இதில் தமிழக தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் பெரும்பாலான தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டனர்.தற்போது இறுதிப் பட்டியல் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இப்பட்டியல்சோனியா காந்தியிடம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ஒப்புதல் அளித்த பிறகு5ம் தேதி பட்டியலை வெளியிடவும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பட்டியலை பல கட்டமாக வெளியிடாமல் ஒரே கட்டமாக அறிவித்து விடவும்தலைவர்கள் சோனியா காந்தியை வற்புறுத்தி வருகிறார்கள். 5ம் தேதிக்குள் எப்படியும்பட்டியல் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications