முன்னாள் பாமக எம்எல்ஏ டிஸ்மிஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தாரமங்கலம் தொகுதி பாமக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக கூறிமுன்னாள் பாமக எம்எல்ஏ கோவிந்தன் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாமக கட்சிக்கட்டுப்பாட்டை மீறி, கட்சித் தலைமையின் முடிவுக்கு விரோதமாக, ஜனநாயகமுற்போக்குக் கூட்டணியின் பாமக வேட்பாளர் கண்ணையனுக்கு எதிராகதாரமங்கலம் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தன் செயல்பட்டு வருகிறார்.எனவே கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ஒப்புதலுடன், கட்சியின் அடிப்படைஉறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் கோவிந்தன்நீக்கப்பட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications