2 தொகுதி பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு
திண்டிவனம்:
தர்மபுரி மற்றும் அணைக்கட்டு தொகுதி பாமக வேட்பாளர்களின் பெயர்களைஅக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமக போட்டியிடும் 31 தொகுதிகளில் பெண்ணாகரம் மற்றும் அணைக்கட்டுதொகுதிகளின் வேட்பாளர்கள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தனர்.இந் நிலையில் பெண்ணாகரம் தொகுதியை திமுக எடுத்துக் கொண்டுஅத்தொகுதிக்குப் பதிலாக தான் போட்டியிட திட்டமிட்டிருந்த தர்மபுரி தொகுதியைபாமகவுக்குக் கொடுத்தது.
இதையடுத்து தர்மபுரி மற்றும் அணைக்கட்டு தொகுதிகளின் வேட்பாளர்களைராமதாஸ் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுக்கூட்டத்தின்போது அறிவித்தார்.
அதன்படி தர்மபுரியில் வேலுச்சாமி, அணைக்கட்டு தொகுதியில் வரலட்சுமி ஆகியோர்போட்டியிடுகின்றனர்.
பாமக சார்பில் போட்டியிடும் 2வது பெண் வேட்பாளர் வரலட்சுமி. ஏற்கனவேகாஞ்சிபுரம் தொகுதியில் சக்தி கமலம்மாள் போட்டியிடுவார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
தென் மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் பொருட்டு நமது கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்ககோரி கூட்டணிக் கட்சிகளிடம் போராடினோம். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
இது பெரும் மனக் குறையாகவே உள்ளது. இருப்பினும், உள்ளாட்சித் தேர்தலில் இதுஈடு செய்யப்படும்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் நாம் நாகரீகமாகப் பேச வேண்டும், பிரசாரம் செய்யவேண்டும். ஜெயலலிதாவைப் பற்றியே நாம் பேச வேண்டும். தனிப்பட்ட முறையில்தாக்காமல் இந்த அரசின் குறைகளை எடுத்துச் சொல்லிப் பிரசாரம் செய்ய வேண்டும்என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications