பாஜக தலைமையில் புதிய கூட்டணி
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான கூட்டணியில் சுப்பிரமணியம் சுவாமியின்ஜனதாக் கட்சி உள்ளிட்ட பல்வேறு குட்டிக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன.அக்கட்சிகளுக்கான தொகுதிகளும் முடிவாகி விட்டன.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கனவில் இருந்து வந்தது பாஜக. ஆனால் அதுநடக்காததால், விஜயகாந்த்துடன் கூட்டணி அமைக்க தீவிரமாக முயன்று வந்தது.ஆனால் விஜயகாந்த் பிடி கொடுக்காததால், கார்த்திக்கை வளைக்க முயன்று வருகிறது.இது தொடர்பாக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசர் மூலம்கார்த்திக்குடன் பேசி வருகிறது. ஆனால் அவரும் இதுவரை உறுதியாக எந்தமுடிவையும் தெரிவிக்கவில்லை.
இதனால் மேலும் காலம் தாழ்த்தாமல் சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சிஉள்ளிச்ச சில குட்டிக் கட்சிகளை இணைத்து ஒரு அணியை உருவாக்கியுள்ளது பாஜக.இதுகுறித்து கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் குமாரவேலு செய்தியாளர்களிடம்கூறுகையில்,
இந்தத் தேர்தலில் பாஜக 175 முதல் 180 தொகுதிகளில் போட்டியிடும். மீதி உள்ளதொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளோம்.
கூட்டணிக் கட்சிகளும் சீட்களும்:
இதன்படி வை. பாலசுந்தரம் தலைமையிலான அகில இந்திய அம்பேத்கர் மக்கள்இயக்க கட்சிக்கு 10 சீட்,
சுப்பிரமணியம் சுவாமியின் ஜனதா கட்சிக்கு 5 சீட்,
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் தமிழர் பூமி கட்சிக்கு 5 சீட்,
பி.டி.குமார் தலைமையிலான திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம் கட்சிக்கு 5 சீட்,
டாக்டர் சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்ற முன்னணிக்கு 5 சீட்,
மக்கள் தேசம் பறையர் பேரவைக்கு 3 சீட்,
தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சிக்கு 2 சீட்,
புரட்சி கவிதாஸ் தலைமையிலான மக்கள் தமிழகம் கட்சிக்கு 2 சீட்ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் சில அமைப்புகள், கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்றார்.
ஜனதாக் கட்சித் தலைவர் சந்திரலேகா மையிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அத்தனை கட்சிகளின் வேட்பாளர்களும்தாமரைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications