பவானி சாகர் திமுக வேட்பாளர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பவானிசாகர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கீதா நடராஜன் மாற்றப்பட்டுள்ளார்.அவருக்குப் பதிலாக ஜீவா ஓ.சுப்ரமணியம் போட்டியிடுவார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,பவானி சாகர் தொகுதி கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கீதா நடராஜன், குடும்பச் சூழ்நிலை காரணமாகதன்னால் தேர்தலில் போட்டியிட இயலவில்லை.
இத்தொகுதியில் யாரை வேட்பாளராகப் போட்டாலும் அவரது வெற்றிக்காக தீவிரமாக பாடுபடப் போவதாகவும்தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து பவானிசாகர் தொகுதியில் திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் ஜீவா ஓ. சுப்ரமணியம்போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் மாற்ற நோய் அதிமுகவில் இருந்து திமுகவுக்கும் பரவிவிட்டது போலும்..
| INDIA NEWS |












Click it and Unblock the Notifications