கார்த்திக் கட்சியின் 3வது பட்டியல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிடும் மேலும் 20 வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர்கார்த்திக் இன்று வெளியிட்டார்.

ஏற்கனவே 45 தொகுதிகளுக்கு 2 பட்டியல்களை வெளியிட்ட அவர் இன்று மூன்றாவது பட்டியலைவெளியிட்டார். அதன் விவரம்:

சேடப்பட்டி- ராமதுரை

காங்கேயம்- பாலன்

கடலூர்- ஆறுமுகம்

சிதம்பரம்- பாரதி மோகன்

நாமக்கல்- விஜயா

ராதாபுரம்- பார்வதி

வாசுதேவநல்லூர்- பாபு

சிவகங்கை- ராஜதுரை

மதுரை மத்தி- ஈஸ்வரன்

வில்லிவாக்கம்-கணேசன்

தி.நகர்-முத்து

கன்னியாகுமரி-உத்தமன்

தொண்டாமுத்தூர்-கிருஷ்ணன்

பொள்ளாச்சி- நாகராஜன்

ஆத்தூர்- சேகர்

பாபநாசம்- மோகன்

மதுரை கிழக்கு- சுப்பையா

தென்காசி-முத்துராஜா

பேராவூரணி- அருணா ராஜா

அருப்புக்கோட்டை- பொன் கிருஷ்ணகாந்தி

பட்டியலை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய கார்த்திக், நான் 7ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறேன். நான்போட்டியிட வேண்டும் என வற்புறுத்துகிறார்கள். ஆனால், எனக்கு அதில் விருப்பமில்லை. இறுதி வேட்பாளர்பட்டியல் வெளியாகும்போது நான் போட்டியிடுவேனா இல்லையா என்று தெரிய வரும்.

நாங்கள் தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு ஆதாயம் கிடைக்கும் என்று கூறுவது சரியல்ல. அதிமுககூட்டணிக்காக 40 நாட்கள் காத்துக் கிடந்தோம். ஆனால், பலனில்லாமல் போனதால் எங்கள் பலத்தை தெரிந்துகொள்ள தனியாக நிற்கிறோம்.

இதனால் எந்தக் கட்சிக்கு நஷ்டம் என்று எனக்குத் தெரியவில்லை.

INDIA NEWS
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+