For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்த்திக்ஜி சரியில்லையாம்-விலகினார் முருகன்ஜி!

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

நடிகர் கார்த்திக்கின் பார்வர்ட் பிளாக் கட்சி பிளவுபட்டுள்ளது.

முருகன்ஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து விலகி விட்டதாகஅறிவித்துள்ளனர்.

கார்த்திக் பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டதும், பல்வேறுபிரிவுகளாக சிதறிக் கிடந்த பார்வர்ட் பிளாக் பிரிவுகளை ஒன்று சேர்த்தார். அவரதுமுயற்சியால் சில பிரிவுகள் தாய்க் கழகத்துடன் இணைந்தன.

அப்படி சேர்ந்தவர்களில் ஒருவர்தான் முருகன்ஜி. இவர் பாரதீய பார்வர்ட் பிளாக்என்ற கட்சியை நடத்தி வந்தார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டும் வந்தார்.

கார்த்திக் வேண்டுகோளை ஏற்று பார்வர்ட் பிளாக்கில் இணைந்த முருகன்ஜி (ஒரிஜினல்பெயர் முருகன் தான்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது தேசியத்தன்மையைபளிச்சென காட்ட பெயரில் ஜியை டபக்கென சேர்த்துக் கொண்டார்) தற்போதுகார்த்திக்கின் நடவடிக்கைகள் சரியில்லை, திருப்தி தரவில்லை என்று கூறிகட்சியிலிருந்து விலகி விட்டார்.

கட்சியிலிருந்து விலகிய பின்னர் பாரதீய பார்வர்ட் பிளாக் கட்சியை புதுப்பித்துள்ளமுருகன்ஜி கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தைக் கூடி சில முக்கிய முடிவுகளைஎடுத்துள்ளார்.

அதன்படி பார்வர்ட் பிளாக் கட்சியுடன் இணைந்தது ரத்து செய்யப்பட்டு பாரதீயபார்வர்ட் பிளாக் மீண்டும் உதயமாகிறது.

இனிமேல் இக்கட்சி தனித்து செயல்படும். வருகிற சட்டசபைத் தேர்தலில் இந்துஇயக்கங்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து 5 தொகுதிகளில் போட்டியிடுவது.

உசிலம்பட்டியில் மூத்த தலைவரும், மக்கள் பிரச்சினைக்காக பலமுறை போராட்டம்நடத்தியவருமான சுரேந்திரன் என்பவருக்கு ஆதரவு தெரிவிக்கவும் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.

பார்வர்ட் பிளாக் கட்சியின் பலம் என்ன என்பதே இன்னும் உறுதியாகத் தெரியாதநிலையில் அதற்குள் கட்சி உடைந்து விட்டது முக்குலத்தோர் மத்தியில் சலசலப்பைஏற்படுத்தியுள்ளது.

ப வைட்டமின் உதவியுடன் கார்த்திக்கின் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களைஅவருக்கு எதிராகத் திருப்பிவிடும் வேலைகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது.

இதனால் போன வாரம் வரை கார்த்திக்கை பாராட்டிய வாய்கள் இப்போது தூற்றஆரம்பித்துள்ளன.

TAMILNADU NEWS INDIA NEWS
[an error occurred while processing this directive]
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X