இதுவரை 1,168 பேர் வேட்பு மனு தாக்கல்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இதுவரை 1,168 வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது.இதுவரை மொத்தம் 1168 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 3வதுநாளான திங்கள்கிழமை மட்டும் 912 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.வரும் 20ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. மனுதாக்கல் முடியஇன்னும் 3 நாளே இருப்பதால் இன்று முதல் 20ம் தேதி வரை வேட்பு மனுதாக்கல்விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நட்ராஜ் விவகாரம்: அரசு மெளனம்
இதற்கிடையே சென்னையில் நிருபர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா,
தேர்தலின்போது பாதுகாப்புப் பணியில் ராணுவமும் பயன்படுத்தப்படும். மேலும் வாக்குச் சாவடிகளில் ரகசியகேமராக்களும் பொறுத்தப்படும். அமைச்சர் ஜெயக்குமார் இலவச தையல் எந்திரம் தந்த விவகாரம் குறித்துகீழ்நிலை அதிகாரிகளின் விசாரணை முடிந்து அறிக்கை கைக்கு வந்துவிட்டுத. இப்போது மேல் மட்ட அதிகாரிகள்விசாரணை நடக்கவுள்ளது. அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை போலீஸ் கமிஷ்னர் நட்ராஜுக்குப் பதிலாக புதிதாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை தருமாறுஉத்தரவிடப்பட்டது. ஆனால், தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்களுக்கு 18ம் தேதி வரைகால அவகாசம் உள்ளது. அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications