• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துண்டு சீட்டும்.. வைகோவின் பல்டியும்: தயாநிதி

By Staff
|

திருச்சி:

வைகோ மீது வழக்குப் போட்டதன் மூலம் நான் மீசை வைத்த ஆண் மகன் தான் என்பதை நிரூபித்துவிட்டேன்.ஆனால், ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் ஏறி என்னை எதற்காக பொடாவில் கைது செய்தீர்கள் என்றுகேள்வி எழுப்பி தானும் ஒரு ஆண் மகன் தான் என்பதை வைகோ நிரூபிப்பாரா என்று மத்திய அமைச்சர்தயாநிதி மாறன் கூறினார்.

திருச்சியில் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,

சரியான ஆண் மகனாக இருந்தால், மீசை வைத்த ஆண் மகனாக இருந்தால் சன் டிவி குறித்து நான் சொன்னகுற்றச்சாட்டுகளுக்காக என் மீது வழக்குப் போடு என்று எனக்கு சவால் விட்டார் வைகோ. அவரது சவாலை ஏற்றுஅவர் மீது நான் வழக்குப் போட்டுவிட்டேன்.

நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. அதனால் தைரியமாக வழக்கையும் போட்டுவிட்டோம்.

அதே போல அவருக்கும் நான் ஒரு சவால் விட்டேன். நீ ஒரு ஆண் மகனாக இருந்தால், ஜெயலலிதாவுடன் ஒரேமேடையில் ஏறி என்னை ஏன் பொடாவில் கைது செய்தீர்கள் என்று ஒரே ஒரு கேள்வியைக் கேள் என்றுசொல்லியிருந்தேன். அந்த சவாலுக்கு இதுவரை வைகோவிடம் இருந்து பதில் வரவில்லை.

என் கெட்ட நேரம் பார்த்தீர்களா? பில் கேட்சுடன் எல்லாம் நான் பேசக் கூடிய நிலையில் அமர்ந்திருக்கிறேன்.அவருடன் தொழில் திட்டங்கள் குறித்து மணிக்கணக்கில் விவாதிக்கிறேன். அதே நேரத்தில் வைகோ மாதிரியானஆட்களுக்கு எல்லாம் பதில் சொல்ல, பதிலுக்கு சவால் விட வேண்டிய நிலையிலும் இருக்கிறேன். எல்லாம் என்நேரம் தான்.

தனது பச்சோந்தித்தனத்தால் வைகோ தனது மரியாதையை இழந்துவிட்டார். இப்போது அதிமுகவுக்கு மட்டுமல்லமதிமுகவுக்கே அவர் ஒரு சுமையாக மாறிவிட்டார்.

நேற்று முன் தினம் ஒரு கூட்டத்தில் வைகோ பேசும்போது, கருணாநிதியால் எப்படி ரூ. 2க்கு அரிசி தர முடியும்?கேட்பவன் என்ன கேனையனா? என்று கேள்வி எழுப்பி அரிசியை குறைந்த விலைக்குத் தரவே முடியாது என்றுபொருளாதார நிபுணர் மாதிரி ஏகப்பட்ட புள்ளி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு ஒரு துண்டு சீட்டு வந்தது. அதில் 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ அரிசி இலவசம்என்று ஜெயலலிதா இப்போது தான் ஆண்டிப்பட்டியில் அறிவித்திருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.

உடனே நம்ம வைகோ அடித்தாரே ஒரு பல்டி. நான் அந்தர் பல்டி, அட்டகாச பல்டி எல்லாம் பார்த்திருக்கிறேன்.ஆனால், இப்படி ஒரு ஹைஜம்ப் பல்டியை பார்த்தே கிடையாது.

துண்டுச் சீட்டு வந்தவுடன் தனது நாக்கை மாற்றிப் போட்டு பேசி ஆரம்பித்த வைகோ, 10 கிலோ வாங்குனா 10கிலோ இலவசம். இது எப்படி இருக்கு. புரட்சித் தலைவி வச்சாரா ஆப்பு.. தங்கத் தலைவியின் திட்டத்தைப்பார்த்தீர்களா?.. உங்களுக்காக, ஏழைகளுக்காக அரிசியை இலவசமாகவே தருகிறார் என்று பேச ஆரம்பித்தார்.

அடப் பாவி.. 2 நொடிக்கு முன்னாடி ஒரு வார்த்தை பேசிட்டு அப்படியே பல்டி அடிக்கிறியே.. உன்னை எவன்மதிப்பான். நீங்கள் சொன்ன புள்ளிவிவரம் என்னாச்சு?, விலையையே குறைக்க முடியாது என்று அடித்துப்பேசிய வைகோ துண்டுச் சீட்டு வந்த வினாடியே ஓசிக்கு அரிசி தர முடியும் என்று பேசியது சுத்தமானபச்சோந்தித்தனம் இல்லையா?

அதனால் தான் சொல்கிறேன், வைகோ மரியாதையை இழந்து ரொம்ப நாளாச்சு. நான் வயதில் குறைந்தவன் தான்ஆனாலும் ஜெயலலிதாவுக்கு ஒரு அட்வைஸ் செய்ய விரும்புகிறேன்.

வைகோவை நம்பாதீர்கள். நாளைக்கே நீங்கள் தோற்றால்.. தோற்கப் போவது உறுதி, தோற்றால் உடனேஉங்களை விட்டுவிட்டு கலைஞரே என்று கருணாநிதியின் காலில் வந்து விழுந்து அழுவார். எங்கள் தலைவரும்மனமிறங்கி சேர்த்தாலும் சேர்த்துக் கொள்வார் (மாறனே சிரித்தார்).

இப்படிப்பட்ட வைகோவை இந்தத் தேர்தலில் மக்கள் புரட்டிப் போட போகிறார்கள்.

வேலைக்கு ஆள் எடுப்பதை ஜெயலலிதா அரசு நிறுத்தி 5 வருடமாகிவிட்டது. ஆனால், அவரது தேர்தல்அறிக்கையில் 5 லட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவோம் என்கிறார். இது அண்டப் புளுகு இல்லையா.

மத்திய அரசில் உள்ள நாங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரும் தொழிற்சாலைகளுக்கும் தடை போடும்ஜெயலலிதாவால் எப்படி இவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

தேர்தலில் அதிமுகவுக்குத் தோல்வி உறுதி என்று அவர் ரொம்பவே நம்பும் உளவுப் போலீஸ் ஜெயலலிதாவிடம்எழுதியே தந்துவிட்டது. இதனால் தான் அரிசி தர்றேன்.. ஓசியில தர்றேன் என்று புளுகு மூட்டைகளைஅவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் பேச வழி செய்தவன் நான். அதெல்லாம் சாத்தியமாஎன்றார்கள். சாத்தியமாக்கிக் காட்டினேன். நோக்கியா தொழிற்சாலையை சென்னைக்குக் கொண்டு வந்தேன்.

ஜெயலலிதா அரசு மட்டும் தடைகள் போடாமல், கமிஷன் கேட்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோதொழில்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.

வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், மத்தியில் நம் அரசு. மாநிலத்திலும் கருணாநிதி ஆட்சிக்குவந்தால் நாங்கள் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் கொண்டு வந்துகொட்டுவோம். தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவோம்.

வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களை கை தூக்கிவிட முயல்வோம். வளர்ச்சித் திட்டங்களைஅமலாக்கி மாநிலத்தை உயர்த்துவோம். இதெல்லாம் சாத்தியமான உறுதிமொழிகள் தான்.

அதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் நம் ஆட்சி வர வேண்டும். அந்த வகையில் யோசித்து, சிந்தித்து மக்கள்வாக்களிக்க வேண்டும் என்றார் மாறன்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X