• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுகவை காப்பி அடிக்கும் ஜெ: கருணாநிதி தாக்கு

By Staff
|

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கருணாநிதி,

2001ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால், முடியவில்லை. அதிமுக ஆட்சிக்குவந்தது. 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் எந்தத் தவறும் செய்திடவில்லை. செய்த ஒரேதவறு கூட்டணி உருவாக்கிக் கொண்டு தேர்தலை சந்திக்காதது தான். அதனால் தான் வாய்ப்பை இழந்தோம்.

அதற்காக நான் வருத்தப்படவில்லை. எதிர்க் கட்சியாக மக்கள் பணியாற்றினோம். அதே நேரத்தில்ஜெயலலிதாவின் ஆட்சியில் அரசு ஊழியர்களில் ஆரம்பித்து சாமானியர்கள் வரை வதைக்கப்பட்டபோது, இந்தஆட்சிக்கு நாமல்லவா வழி வகுத்துவிட்டோம் என்று வருத்தப்பட்டது உண்டு.

நடந்தது நடந்தவையாக இருக்கப்பட்டும். நடப்பது நல்லதாக இருக்கட்டும்.

அதிமுக ஆட்சி பதவிக்கு வந்தவுடனே பழிவாங்கும் வேலையை ஆரம்பித்தார்கள். முதல் பலி கடாவாகஎன்னைத் தேர்ந்தெடுத்தார்கள். இரவு 12 மணி தூங்கிக் கொண்டிருந்தேன். போலீஸ் அதிகாரிகள் கதவைஉடைத்துக் கொண்டு வந்து துடிதுடிக்க, தவிக்க தவிக்க தாக்கி இழுத்துச் சென்றார்கள்.

அதைத் தடுத்த டி.ஆர்.பாலு, முரசொலி மாறன் ஆகியோர் தாக்கப்பட்டனர். அதில் தான் மாறன் உடல் நிலைமேலும் மோசமானது. கழகத் தோழர்கள் 10,000 பேரைப் பிடித்து உள்ளே போட்டார்கள். அத்தோடுவிடவில்லை. அடுத்ததாக மக்களை வதைக்கத் தொடங்கினார்கள்.

அதற்கெல்லாம் ஜனநாயகரீதியில் பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது. ஜெயலலிதாவையும் பாருங்கள்என்னையும் என் கூட்டணித் தலைவர்களையும் பாருங்கள். யார் உங்களுக்கு நல்லது செய்வார்கள் என்றுயோசியுங்கள்.

திமுகவின் தேர்தல் அறிக்கை உழைப்பாளர்களுக்காக, விவசாயிக்காக, சாலையோரத்தில் படுத்து பசியோடுஅலையும் பண்டார பரதேசிகளுக்காகத் தயாரிக்கப்பட்டது. 2 ரூபாய்க்கு அரிசி தர முடியாது என்று சொன்னஜெயலலிதா புயல் வேகத்தில் இலவச அரிசி தருவதாக அறிவித்தார். அது தான் எங்களுக்குக் கிடைத்த முதல்வெற்றி என்றார்.

முன்னதாக வேலூரில் பிரசாரம் செய்ய வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேரமின்மைகாரணமாக தொகுதி, வேட்பாளர்களின் பெயர்களை மட்டும் கூறி வித்தியாசமாகபிரசாரம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனுக்கு ஆதரவாக கோட்டை மைதானத்தில் பிரசாரம்செய்வதாக இருந்தார் கருணாநிதி. ஆனால் வரும் வழியெங்கும் பெரும் கூட்டம்இருந்ததால் அவரால் பொதுக் கூட்ட மேடையை குறித்த நேரத்தில் அடையமுடியவில்லை.

பிரசாரம் செய்வதற்கான நேரம் முடிய 4 நிமிடங்களே இருந்த நிலையில் மேடையில்வேட்பாளர்களை மட்டும் நிற்கச் சொல்லி விட்டு மற்றவர்களை கீழே இறங்கச்செய்தார்.

பின்னர் கருணாநிதியை மேடையில் ஏறினார். இதையடுத்து மைக்கைப் பிடித்தகருணாநிதி இன்னும் அரை நிமிடம்தான் இருக்கிறது. எனவே சுருக்கமாக டித்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டு, வேட்பாளர் பெயர்களை வாசித்தார்.

காட்பாடி-துரைமுருகன், வேலூர்-ஞானசேகரன், ராணிப்பேட்டை-காந்தி,ஆற்காடு-இளவழகன், அரக்கோணம்-ஜெகன்மூர்த்தி, பேரணாம்பட்டு -சின்னச்சாமிஎன்று கூறி நிறுத்தினார்.

பின்னர் இன்று வேலூர் கோட்டை மைதானத்தில் உங்களை சந்திக்கிறேன், நாளைசென்னை கோட்டையில் சந்திப்பேன் என்று கூறி தனது பிரசாரத்தை முடித்தார்கருணாநிதி.

நேரக் குறைவை படு சாதுரியமாக பயன்படுத்தி, மிக சுருக்கமாக அதே நேரத்தில்சுருக்கென பிரசாரம் செய்த கருணாநிதியைப பாராட்டி கைத்தட்டல் வானைப்பிளந்தது.

அதற்கு முன்னதாக பேரணாம்பட்டு பகுதியில் பிரச்சாரம் செய்த கருணாநிதி,

நான் போகும் இடமெல்லாம் ஏராளமான மக்கள் திரள்கின்றனர். மக்களின் எழுச்சியைகண்கூடாக பார்க்க முடிகிறது. இங்கே இஸ்லாமிய பெருமக்களும் பெரும்எண்ணிக்கையில் திரண்டிருக்கிறீர்கள்.

முஸ்லீம்களுடன் எனக்கு நட்பு ஆரம்பித்தது என் பள்ளிப் பருவத்தில். திருவாரூரில்நடந்த இஸ்லாமியரின் நிகழ்ச்சியில் சிறுவனாக கொடியேந்தி கலந்து கொண்டவன்நான். முஸ்லீம்களின் இட ஒதுக்கீட்டுக்கு என்றும் ஆதரவாளன்.

ஆனால், ஜெயலலிதா யார், அவர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.பாபர் மசூதி இடிப்பில் ஆரம்பித்து, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு வரைஅவர்களுக்கு எதிரான நிலையை எடுத்தவர்.

2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என்று நாங்கள் அறிவித்ததும் அதெல்லாம் சாத்தியமாஎன்று ஜெயலலிதா புயல் போல கேள்வி கேட்டார். கூடவே புயலும் பேசினார்.

அதே போல விவசாயக் கடன் ரத்து என்றோம். அதுவும் சாத்திமில்லை என்றார்ஜெயலலிதா. இதை உலக வங்கி ஏற்குமா என்று கேட்டார். அவருடன் புதிதாகசேர்ந்துள்ள பெரிய ஆளும் (வைகோ), இதை நபார்டு வங்கி ஏற்குமா? 4 முறைமுதல்வராக இருந்த கருணாநிதிக்கு இது கூடத் தெரியாதா என்று கேட்டார்.

ஆனால், இப்போது 10 கிலோ அரிசி இலவசம் என்று ஆரம்பித்து விவசாய கடன் ரத்துஎன்பது வரை திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதைத் தான்ஜெயலலிதாவும் இப்போது ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இதைவிட ஒரு காரியம் செய்யலாம். நாங்கள் புத்தி கெட்டு தேர்தல் அறிக்கையில்இதையெல்லாம் சேர்க்காமல் விட்டுவிட்டோம். அதையெல்லாம் கருணாநிதி தனதுதேர்தல் அறிக்கையில் சேர்த்துவிட்டார்.

பொது மக்களே, திமுக தேர்தல் அறிக்கையை நீங்களும் ஏற்றுக் கொள்ளுங்கள்.நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லிவிடலாமே ஜெயலலிதா.

விவசாயக் கடன் ரத்து என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதை அந்த பெரிய ஆள்கேள்வி கேட்பாரா? இதை நபார்டு வங்கி ஏற்காதே என்று அந்த தோட்டத்துஅம்மாவிடம் சொல்ல வேண்டியது தானே? என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X