For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கு இலசவ தங்கத் தாலி!: அள்ளித் தர்றார் அம்மா!

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின்போது 4 கிராம் தங்கத் தாலி இலவசமாககொடுக்கப்படும் என புதிய வாக்குறுதியை முதல்வர் ஜெயலலிதா திடீரெனஅறிவித்துள்ளார்.

திமுகவின் அதிரடி அறிவிப்புகளால் கலங்கிப் போயிருக்கும் அதிமுக தரப்பும்பதிலுக்குபல்வேறு அறிவிப்புகளை அடுக்கி வருகிறது.

திமுகவின் கிலோ அரிசி 2 ரூபாய் என்ற திட்டத்திற்குப் போட்டியாக, 10 கிலோஇலவச அரிசியை அறிவித்தார் ஜெயலலிதா. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களைத்தள்ளுபடி செய்யப் போவதாக திமுக அறிவித்ததும், பதிலுக்கு ஜெயலலிதாவும் அதேஅறிவிப்பை வெளியிட்டார்.

இப்போது இன்னொரு அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். பெண்களுக்குகல்யாணத்தின்போது 4 கிராம் தங்கத் தாலி வழங்கப்படும் என்பதுதான் அவருடையஅதிரடி வாக்குறுதியாகும்.

குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பழனிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துஜெயலலிதா பேசுகையில்,

தங்கம் விலை இப்போது அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தவறான நிதிக்கொள்கையே இதற்குக் காரணம். சவரன் விலை ரூ. 7,176க்கு விற்கிறது. இன்னும் சிலஆண்டுளில் இது 10,000த்தை எட்டி விடும் எனத் தெரிகிறது.

உங்கள் ஆதரவோடு, உங்கள் அன்புச் சகோதரியான நான் மீண்டும் ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்தால், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவாகிஉள்ளவர்களுக்கும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பெண்களுக்கும்திருமணத்தின்போது அரை பவுன் அதாவது 4 கிராம் தங்கத் தாலி இலவசமாகவழங்கப்படும்.

விவசாயிகள் வாங்கியுள்ள கூட்டுறவுக கடன்கள், வட்டி ஆகியவை மழுமையாகதள்ளுபடி செய்யப்படும்.

வேலை வாய்ப்பு இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.தகவல் தொழிலநுட்பத் துறையில 32 லட்சம் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு புதியவேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

கருணாநிதி நிறைவேற்றவே முடியாத அளவுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகிறார். வாக்குறுதிகளை அளிப்பதும், பின்னர் அதை காற்றில் பறக்க விடுவதும்அவருக்கு கைவந்த கலையாகும்.

ஆனால் நான் எப்பாடு பட்டாவது நிறைவேற்றுவேன் என்பது வரலாறு என்றார்ஜெயலலிதா.

தமிழகத்தில் தனக்கு எதிரான அலை உருவாகிவிட்டதாக அதிமுக கருதஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் கடைசி கட்டத்தில் இந்த அறிவிப்பைஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X