For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண நிதியுதவியை நிறுத்தியவர் தாலி கொடுப்பதேன்?: கருணாநிதி கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

ஜெயலலிதாவை தோல்வி பயம் பிடித்து ஆட்ட ஆரம்பித்துவிட்டது. இதனால் தான்இப்போது தங்கத் தாலி தருவதாக கூறுகிறார் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

கோவையில் நடந்த மிக பிரமாண்டமான பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில்,

திமுக ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தியது அதிமுக அரசு. திமுகஆட்சியில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவியாக ரூ. 10,000 அளிக்கப்பட்டது.

அதை ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக நிறுத்தி ஏழைப் பெண்களின் வயிற்றில்அடித்தது இதே ஜெயலலிதா தான். ஆனால் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்15,000 தருவோம் என்று அறிவித்துள்ளோம்.

ஏழைகள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு மிக நல்ல வரவேற்பு இருப்பதால் மிரண்டுபோய்விட்ட ஜெயலலிதா, இப்போது இலவசமாக தங்கத் தாலி தருவதாக கூறுகிறார்.எல்லாம் தோல்வி பயமே காரணம்.

இலவசத் தாலித் திட்டம் இந்துக்களுக்கு மட்டுமா? அல்லது அனைத்துமதத்தினருக்குமா? இது குறித்து ஜெயலலிதாவிடம் எந்த விளக்கமும் இல்லை.

சும்மா பேச்சுக்கு, அவசரத்துக்கு வெளியிட்ட அறிவிப்புப தானே. எப்படி விளக்கம்இருக்கும். இந்தத் திட்டம் சாத்தியமா என்றெல்லாம் அவர் ஆலோசனை கூடநடத்தியிருக்க மாட்டார்.

தோல்வி பயம் பிடித்து ஆட்டுவதால் எதையாவது சொல்லி ஓட்டு வாங்க வேண்டியநிலைக்கு அவர் தள்ளப்பட்டுவிட்டார்.

ஏழைகளின் திருமண உதவித் திட்டத்தை நிறுத்திய ஜெயலலிதா, தாலிக்குத் தஙகம்திட்டத்தை கடந்து ஐந்து ஆண்டுகளாக ஏன் அறிவிக்கவில்லை?

இந்தத் தேர்தலில் எங்களது தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று மத்தியநிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

நாடகத்திலே, சினிமாவிலே கதாநாயகன் இருந்தால் வில்லனும் (ஜெயலலிதா)இருப்பான். அவனுக்கு ஒரு துணையும் (வைகோ) இருப்பான்.

இறுதியில் கதாநாயகன்தான் வெற்றி பெறுவான். வில்லன் அழிவான். இல்லையேல்திருந்துவான், திருந்தினால் உன்னை மன்னிப்போம் என்றார் கருணாநிதி.

முன்னதாக சத்தியமங்கலம் திமுக வேட்பாளர் தர்மலிங்கத்திற்கு ஆதரவாகசத்தி-கோபி சாலையில் கூடியிருந்த பெரும் திரளான மக்களிடையே கருணாநிதிபேசுகையில்,

தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளர்களின் அவலத்தை மக்கள் நன்கு அறிவீர்கள்.பெட்டி பெட்டியாக நடிகர், நடிகைகளுக்குப் போகிறது. அதை வாங்கிக் கொண்டுமேடையேறும் அந்தக் கலைஞர்கள் தங்களது வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

இதைப் பிரசாரம் என்று வேறு கூறிக் கொள்கிறார்கள்.

திமுகவில் என்ன வாக்குறுதிகள் எல்லாம் தரப்பட்டிருக்கிறதோ, அதை அப்படியேவேறு பெயர்களில் சொல்லிக் கொண்டு வருகிறார் ஜெயலலிதா.

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் குறித்து நான்கு வாரத்திற்கு முன்பு வரைகவலைப்படாத ஜெயலலிதா இப்போது அதுகுறித்து பேசி வருகிறார். நபார்டு வங்கிஉதவி இல்லாமலேயே கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்கிறார் ஜெயலலிதா.

ஆனால் அவரது கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் தலைவர் (வைகோ)இன்னொருவர் நேற்று வந்து இங்கு பேசுகையில், நபார்டு வங்கி உதவி இல்லாமல்அதை ரத்து செய்ய முடியாது என்கிறார்.

தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் மறப்பவர்கள் அல்ல, காற்றில் பறக்க விடவும்மாட்டோம். திமுகவின் தேர்தல் அறிக்கைதான் எங்களது ஆட்சியின் முதல் பட்ஜெட்அறிக்கை என்றார் கருணாநிதி.

முன்னதாக ஈரோட்டில் பேசிய கருணாநிதி, ஜெயலலிதாவே தொடர்ந்து ஆளவேண்டும் என சில ஆதிக்க சக்திகளும் மீடியாக்களும் வரிந்து கட்டிக் கொண்டுகளமிறங்கியுள்ளன.

ஆனால், மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக அணி திரண்டுவிட்டார்கள். நான்தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்துவிட்டேன். என் 60 ஆண்டு காலபொது வாழ்வில் இப்படி ஒரு எழுச்சியை நான் பார்த்ததே இல்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X