For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. அடுத்த ஒருமணி நேரத்திலேயே முடிவுகள் தெரிய ஆரம்பித்துவிடும்.

3 மணி நேரத்திற்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து அனைத்துத் தொகுதிகளின் முடிவுகளும் தெரிந்துவிடும் என தேர்தல்ஆணையம் தெரிவித்துள்ளது.

234 தொகுதிகளுக்கும் கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படவுள்ள 82 மையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே மத்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.அந்த இடத்தில் மாநில போலீஸாருக்கு (நம் ஊர் போலீஸைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை) அனுமதி தரப்படவில்லை.அவர்கள் கட்டடத்திற்கு வெளியில்தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களின் உட்புறத்தில்மத்திய போலீஸாரும், வெளியே பிரதான வாசல்களில் மாநில போலீஸார், ஆயுதப் படை போலீஸார் உள்ளிட்டோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்கு எண்ணும் மையங்களில் ரகசிய கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோப்ப நாய்ப் படைகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளன. வாக்கு எண்ணும் நபர்கள், கட்சிகளின் ஏஜென்டுகள் தவிர யாரும்உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, நடிகர் விஜயகாந்த், ஸ்டாலின் உள்ளிட்ட 2,586 வேட்பாளர்களின்தலையெழுத்து நாளை மாலைக்குள் தெரிந்து விடும். இதில் 1,222 பேர் சுயேச்சைகள். 160 பேர் பெண்கள்.

காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். பின்னர் மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

சென்னையில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் குயீன் மேரிஸ் கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம்,பிரசிடெண்சி கல்லூரி உள்ளிட்ட இடங்களை ஆணையர் லத்திகா சரண் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைபலப்படுத்தினார்

.பாண்டிச்சேரியிலும்..

அதே போல பாண்டிச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்லாம் மாநில சட்டமன்றத் தேர்தலின் வாக்குகளும் இன்றுஎண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகளை தட்ஸ்தமிழ்.காம் நேரடியாக வழங்கும்.

தொலைபேசியில் ரிசல்ட் அறிய:

தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையில் 5,888 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

மொத்தம் 2,944 மேசைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 8 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக கிருஷணகிரி, தர்மபுரி, நாமக்கல்,தேனி, நீலகிரி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 1 மையம்அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட தொகுதிகளின் முடிவை தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்: 25675074.

விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் - 25675076.

நாமக்கல், கோவை, நீலகிரி, திண்டுக்கல் - 25675075.

தேனி, மதுரை, கரூர், பெரம்பலூர், திருச்சி - 25675081.

நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை - 25675072.

ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி - 25675071.

முற்பகல் 11 மணி வாக்கில் கணிசமான அளவிலான தொகுதிகளின் முடிவுகள் தெரிய வரும்.

பிற்பகல் 1 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் தெரிந்து விடும். பிற்பகல் 2 மணிக்குள் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X