டெல்லி செல்கிறார் கருணாநிதி
சென்னை:
முதல்வர் கருணாநிதி 20ம் தேதி டெல்லி செல்லவுள்ளார்.
ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது.ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வர் பதவியை ஏற்றுள்ளார்.இந் நிலையில் வரும் 20ம் தேதி கருணாநிதி டெல்லி செல்லவுள்ளதாகத் தெரிகிறது.
தனது டெல்லி பயணத்தின்போது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர்மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இடது சாரித் தலைவர்கள்உள்ளிட்டவர்களை சந்திக்கிறார் கருணாநிதி.
வரும் 22ம் தேதியுடன் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவிக்கு வந்து 2ஆண்டுகள் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான நிகழ்ச்சியிலும் கருணாநிதி கலந்து கொள்வார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் முதல் பட்ஜெட்:
இதற்கிடையே நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள க.அன்பழகன் தனது முதல் பட்ஜெட்டை அடுத்த மாதம் தாக்கல் செய்கிறார்.24ம் தேதி புதிய சபாநாயரின் தலைமையில் ஆளுனர் உரையுடன் சட்டசபைக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதையடுத்து ஜூன் மாதம் சட்டசபையில் திமுகஅரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
நிதியமைச்சர் அன்பழகன் பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார்.
ராம. நாராயணனுக்கு புதுப் பதவி:
தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக இயக்குனர் ராம. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.திமுகவைச் சேர்ந்தவர் ராம. நாராயணன். பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ளவர். திமுக சார்பில் முன்பு போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபத்தில்வெளியான பாசக்கிளிகள் படத்தைத் தயாரித்தவர்.
இந் நிலையில் அவரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக தமிழக அரசு நியமித்துள்ளது. கவிஞர் இளையபாரதி செயலாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications