For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லாம் மஞ்சள் மயம்-திட்டு வாங்கிய அதிகாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா ஆட்சியில் பேனா, நோட் பேட், சேர், துண்டு என அனைத்தையும் பச்சை மயப்படுத்திய அதிகாரிகள்முதல்வர் கருணாநிதியை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக எல்லாவற்றையும் மஞ்சள் நிறத்திற்கு மாற்றிவிட்டனர்.

இதைக் கண்டு கருணாநிதி சந்தோஷப்படுவார் என்று நினைத்திருந்த அதிகாரிகளுக்கு திட்டு தான் மிஞ்சியது.

அமைச்சரவையின் முதல் கூட்டம் கோட்டையில் நடந்தது. இதற்காக அமைச்சரவைக் கூட்ட அறைக்குள்கருணாநிதி நுழைந்தபோது அவருக்கு மஞ்சள் நிற சேர் போடப்பட்டிருந்தது. அதன் மீது மஞ்சள் நிற டர்க்கிதுண்டு போர்த்தப்பட்டிருந்தது.

முகம் சுளித்தவாரே வந்து அமர்ந்த கருணாநிதியின் முன் குறிப்புகள் எழுத நோட்-பேட்கள் வைக்கப்பட்டன.அவையும் மஞ்சள் கலர். அருகில் இரு மஞ்சள் பேனாக்கள்.

அதே போல அமைச்சர்களுக்கும் எல்லாம் மஞ்சள் கலரில் தரப்பட்டன. (நல்ல வேளை குடிக்க மினரல் வட்டருக்குபதில் மஞ்ச தண்ணியை வைக்காமல் விட்டார்கள்)

இதைப் பார்த்த கருணாநிதி, கூட்டத்தை ஒருங்கிணைத்த கோட்டையின் மூத்த அதிகாரிகளை அழைத்தார்.என்னய்யா இது.. எதுக்குய்யா எல்லாம் மஞ்சள்? திருந்தவே மாட்டீங்களா என்று டோஸ் விட்டபடிஅமைச்சரவைக் கூட்டத்தை ஆரம்பித்தார்.

கூட்டம் முடிந்த கிளம்புகையில், அதிகாரிகளை அழைத்த கருணாநிதி, வழக்கமாக எவை எவை எந்தெந்தநிறத்தில் இருந்ததோ அந்த நிறத்துக்கே எல்லாத்தையும் மாத்துங்க.. பச்சையாக மாற்றியதையும் அதன் வழக்கமாகநிறத்துக்கு மாத்துங்க.. மஞ்சள் மயப்படுத்தும் வேலையெல்லாம் வேண்டாம் என்றார் கடுகடுப்பாக.

எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்று மாற்றப்பட்டிருந்த கோட்டை (ஜெயலலிதா ஆட்சியில் கால் மிதிகள் கூடபச்சை தான்) நீண்ட காலத்துக்கு பின் இப்போது தனது ஒரிஜினல் கலருக்கு மாறிக் கொண்டிருக்கிறது.

சட்டசபையில் கருணாநிதிக்கு சிறப்பு இருக்கை:

இதற்கிடையே கருணாநிதி அமர்வதற்காக சட்டசபையில் உள்ள அவரது இருக்கையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வயது காரணமாகவும், அவரது உடல் நலையைக் கருத்தில் கொண்டும், சட்டசபையில் முதல்வர் அமரும் இருக்கையில் குஷன் அதிகம் இருக்கும் வகையில்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், முதுகுப் பகுதி நன்கு இருக்கையில் பொதியும்படி இருக்கை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கையை வசதியாக வைத்துக் கொள்ளும்படியும் இருக்கைமாற்றப்பட்டுள்ளது.

வேனில் வந்து போகும் கருணாநிதி:

மேலும் பிரசாரத்தின்போது பயன்படுத்திய வேனையே தற்போது சட்டசபைக்கும், தனது அலுவலகத்திற்கு வருவதற்கும் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திவருகிறார்.

அந்த வேனில் கருணாநிதி வசதியாக அமர்வதற்கேற்ப பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த வேனையேஅரசு வாகனமாக அவர் மாற்றிக் கொள்வார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X