For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் கருணாநிதியை தாக்க சேகர்பாபுமுயற்சி- காங், அதிமுக எம்எல்ஏக்கள் அடிதடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சசிகலா பினாமிகளுக்கு சொந்தமானது என்று குற்றம் சாட்டப்படும் மிடாஸ் மதுபானஆலையில் நடந்து வரும் முறைகேடுகள் குறித்து இன்று திமுக, அதிமுகஉறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது முதல்வர்கருணாநிதியைத் தாக்க அதிமுக உறுப்பினர் சேகர்பாபு முயன்றதால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

தமிழக சட்டசபையில் இன்று காலை ஆளுநர் உரை மீதான தீர்மானம் விவாதத்திற்குஎடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை அவை முன்னவர் அன்பழகன்தாக்கல்செய்தார். அதை வழிமொழிந்து திமுக உறுப்பினர் அப்பாவு பேசுகையில்,

கடந்த ஐந்து ஆண்டுகளாகநநிடந்து வந்த எதேச்சதிகார ஆட்சி, மக்கள் தீர்ப்பின் மூலம்அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நீதிமன்ற தீர்ப்புகள், நீதிபதிகளின் கருத்துக்கள்மதிக்கப்படவில்லை என்று பேசிய அப்பாவு,

கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி சட்டசபையில் ஜெயலலிதா கூறிய ஒருகருத்தை குறிப்பிட்டுப் பேசியபோது அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகஎழுந்து கடுமையாக ஆட்சேபித்து குரல் எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி, உறுப்பினர் அப்பாவு அவைக் குறிப்பில்இருப்பதைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்றார்.

அதிமுகவினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தொடர்ந்து அப்பாவு பேசுகையில்,கடந்த ஆட்சி காலத்தில் மதுக் கடைகள் அனைத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.

தனியார் நிறுவனமான மிடாஸ் மதுபான நிறுவனத்தின் மூலமாக ஒட்டுமொத்த மதுவும்கொள்முதல் செய்யப்பட்டது. இதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன என்றார்.

அவர் இவ்வாறு கூறியதும், எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுந்துஅப்பாவு பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். தொடர்ந்து அனைத்து அதிமுகஉறுப்பினர்களும் எழுந்து அப்பாவு தொடர்ந்து பேச அனுமதிக்கக் கூடாது என்றுகோஷம் எழுப்பினர்.

இதனால் அவையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அமைச்சர் பொன்டி குறுக்கிட்டு அப்பாவு சரியான கருத்தைத்தான் சொல்கிறார். இதைஏன் அதிமுக எதிர்க்கிறது என்றார்.

அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட் உறுப்பினர்கோவிந்தசாமி, பாமக உறுப்பினர் வேல்முருகன் ஆகியோரும் எழுந்துஅதிமுகவினருக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.

காங்கிரஸ் எம்எல்ஏக்களும் அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பாண்டுரங்கன் உள்ளிட்டோர் சபாநாயகர்ஆவுடையப்பன் இருக்கைக்கு முன்பாக கூடி திமுகவினரைப் பார்த்து ஆவேசமாககூச்சலிட்டனர்.

அப்போது திமுகவுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டல்அல்போன்ஸைத் தாக்க சில அதிமுக எம்.எல்.ஏக்கள் முயன்றனர்.

அதிமுக உறுப்பினர் கலைராஜன் மைக்கைப் பிடுங்கி அடித்தார். இதில் காங்கிரஸ்உறுப்பினர் ஞானசேகரனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், அதிமுகஎம்எல்ஏக்களுக்கு இடையே அடிதடி நடந்தது. இதில் சில மைக்குகள் உடைந்தன.

அப்போது அதிமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு கையை வேகமாக ஓங்கியபடிகருணாநிதியை நோக்கிப் பாய்ந்து வந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், திமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டின் உள்ளிட்டோர்கருணாநிதியை சூழந்து கொண்டு பாதுகாப்பாக நின்றனர்.

பிற திமுக எம்எல்ஏக்கள் சேகர் பாபுவை நோக்கி ஆவேசமாகக் கத்தியபடி அவரைநோக்கி முன்னேறினர். அவர்களை பிற அமைச்சர்கள் பிடித்து, தடுத்து நிறுத்தினர்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களை நோக்கி அதிமுகவினர் தகாத வார்த்தைகளால்திட்டினர். இதனால் அவையில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.

இதையடுத்து சேகர் பாபுவை அவைக் காவலர்களை விட்டு வெளியேற்றஉத்தரவிட்டார் சபாநாயகர். வெளியேற்றப்பட்ட சேகர் பாபு மீண்டும் அவைக்குள் ஓடிவந்து சத்தம் போட்டார்.

அவருடன் அதிமுகவினரும் சேர்ந்து கொண்டு அமளி செய்தனர். இதையடுத்துஎல்லை மீறி நடந்து கொண்ட அதிமுக உறுப்பினர்களை இந்தக் கூட்டத் தொடர்முழுவதும் நீக்குவதாக சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்தார். இதைத் தொடர்ந்துஅதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதிமுக எதிர்க் கட்சி வரிசைக்கு வரும்போதெல்லாம் அவையில் அடிதடியில்இறங்குவது அக் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது நினைவுகூறத்தக்கது. 1991ல்அப்போதைய முதல்வர் கருணாநிதி பட்ஜெட்டை படித்துக் கொண்டிருந்தபோதுபட்ஜெட் புத்தகத்தைத் தூக்கி அவரது முகத்தில் வீசி கலாட்டா செய்தார் ஜெயலலிதா.அதில் கருணாநிதியின் கண்ணாடி உடைந்து விழுந்தது.

இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா மீது பாய்ந்து அவரை அடித்து,உதைத்தனர். அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது. அப்போது தான் தன்னைதுரைமுருகன் சேலையைப் பிடித்து இழுத்ததாக வெளியில் வந்து புகார் கூறிபரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.

இப்போதும் எதிர்க் கட்சியாகிவிட்ட நிலையில் தனது வேலையை காட்டஆரம்பித்துவிட்டது அதிமுக.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X