For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

14 இன்ச் கலர் டிவி வழங்கப்படும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி வழங்கப்படும் கலர் டிவியின் அளவு (சைஸ்) 14 இன்ச்ஆக இருக்கும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் ஆளுனர் உரை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து கருணாநிதிஇன்று பேசினார். அப்போது,

தொழில் கல்வி படிப்புகளில் கிராமப்புற மாணவ, மாணவியருக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளில் 68 வாக்குறுதிகளைநிறைவேற்ற இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சியவையும்படிப்படியாக நிறைவேற்றப்படும்.

13,000 மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை:

ஊராட்சிக்கு ஒரு மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். பணி நீக்கம்செய்யப்பட்ட 13,000 மக்கள் நலப் பணியாளர்களும் மீண்டும் பணியில்அமர்த்தப்படுவர். அவர்களது ஊதியம் ரூ. 750லிருந்து ரூ. 1,000 ஆகஉயர்த்தப்படும்.

ஜூன் 3ம் தேதி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டத்தின் கீழ் 33,333 பெண்களுக்கு திருமண உதவியாக தலா ரூ. 15,000வழங்கப்படும்.

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் நடைபெற்ற தவறுகள்குறித்து உயர் நிலைக் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

பொது நூலகங்களில் வாங்கப்படும் நூல்களின் எண்ணிக்கை 1,000ஆகஉயர்த்தப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி பெயரில் ஏரோநாட்டிக்கல் பயிற்சி மையம்அமைக்கப்படும். திருக்குவளை, மன்னார்குடியில் புதிய ரயில் நிலையங்கள்அமைக்கப்படும்.

திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண நடவடிக்கைஎடுக்கப்படும்.

உழவர் சந்தைகள், சமத்துவபுரம் ஆகிய திட்டங்கள் தொடரும். பெரியாரின்கருத்துக்களைப் பரப்புவதற்கு வசதியாக சமூக சீர்திருத்தத் துறை புதுப்பிக்கப்படும்.

அதிமுக போட்ட வழக்குகள் வாபஸ்:

கடந்த ஆட்சியில் 2001 முதல் 2006 வரை தொடரப்பட்ட அரசியல் தலைவர்கள் மீதுதொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் வாபஸ் பெறப்படும்.ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு முறையில் நடத்தப்படும்.

திமுக வாக்குறுதிகளில் ஒன்றான இலவச கலர் டிவி திட்டத்தின் கீழ் 14 இன்ச்அளவுள்ள கலர் டிவி வழங்கப்படும். இதற்கான டிவிகளை வாங்க சர்வதேச ஒப்பந்தபபுள்ளி கோரப்படும்.

20 லட்சம் பேருக்கு 2 ஏக்கர் நிலம்:

நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் எப்படி கொடுப்பீர்கள்? அரசிடம் 3 லட்சம் ஏக்கர் தானே உள்ளது?ஆனால், 1.82 கோடி விவசாயிகள் இருக்கிறார்களே? எப்படி நிலம் கொடுப்பீர்கள் என்று ஜெயலலிதா கேட்டார்.

கவர்னர் உரையை சரியாகப் படிக்காமல் அல்லது படித்துவிட்டு வேண்டுமென்றே திரித்துக் கூறுவதற்காக இப்படிப்பேசியுள்ளார்.

நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று தானே தேர்தல் அறிக்கையில்கூறியுள்ளோம். அதைக் கொடுக்க முடியும் என்பது நம் கருத்து.

அரசு நிலம் மட்டுமல்ல, ஏழைகளின் நிலம், சீர் செய்யப்படாமல் கிடக்கும் நிலத்தை பண்படுத்தி வழங்குவோம்.அதை ஏழை விவசாயிகள் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். விரும்பம் இல்லாவிட்டால் அதை அரசே விலைகொடுத்து வாங்கி இன்னொரு ஏழை விவசாயிக்குத் தரும்.

ஜெயலலிதாவின் கருத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வக்காலத்து வாங்குகிறார். 3 தடவைஎம்பியாக இருந்தவர் இதைக் கூட புரிந்து கொள்ளாமவிட்டால் எப்படி?

1.82 கோடி நிலம் தேவைப்படும் என்று வைகோ கூறுகிறார். இந்த சந்தேகம் அவருக்கு எப்போது வந்திருக்கவேண்டும்? மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 86 லட்சம் ஏக்கர் நிலத்தை தலா 2 ஏக்கர் வீதம்நிலமற்றவர்களுக்கு வழங்குவதாகக் கூறியிருக்கிறார். அவரது கணக்குப்படியே பார்த்தாலும் அவர் எப்படி 2ஏக்கர் நிலம் தர முடியும். அப்போது அவரது புத்தி எங்கே போனது.

மிடாஸ் நிறுவனம் 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்திடம் மட்டும் தொடர்ந்து பல நூறுகோடிகளுக்கு மதுபானம் வாங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மட்டும் இந்த அளவுக்கு பண பரிமாற்றம் நடந்ததன்காரணம் என்ன?

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்தீர்கள். தேசிய வங்கிக் கடனை ரத்து செய்ய மாட்டீர்களாஎன்று ஜெயலிலதா கேட்கிறார். 2001ல் ஜெயலலிதா கூட்டுறவுக் கடன் ரூ. 300 கோடியைத் தானே தள்ளுபடிசெய்தார். அப்போது தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்தாரா?

கடன் வாங்கி ஏற்கனவே திருப்பிச் செலுத்தி விவசாயிகளுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுப்பீர்களா என்றுகேட்கிறார் ஜெயலலிதா?. திராட்டைத் தோட்டம் போடுபவர்களும் விவசாயிகள் தான் என்றார் கருணாநிதி.

அதன் பின்னர் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக கருணாநிதி உட்கார்ந்து பேச சபாநாயகர் அனுமதி தந்தார். ஆனால், சிறிது நேரம் நின்றபடியே பேசியகருணாநிதி, பின்னர் உட்கார்ந்து பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X