TCS, Infosys: 30 வருடமாக கட்டிய கோட்டை.. இடித்து தரைமட்டமாக்கும் OpenAI..! என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, இதுவரை ChatGPT என்ற AI மாடல்களை உருவாக்கும் ஒரு டெக் நிறுவனமாக தான் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நேரடியாக பெரிய நிறுவனங்களுக்கு ஏஐ சேவையை பயன்படுத்தி அவர்களின் வர்த்தகத்தை எப்படி மேம்படுத்துவது என்பதை காட்ட களமிறங்கியுள்ளது.

இதற்காக ஓப்பன்ஏஐ புதிதாக 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி, மிகப்பெரிய திட்டத்தை தீட்டி வருகிறது. இந்த நடவடிக்கை உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இந்திய ஐடி சேவை நிறுவனங்களான TCS, Infosys, Wipro, Cognizant நிறுவனத்தின் சிஇஓ-க்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதேவேளையில் இந்திய ஐடி துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

AI IT TCS Infosys OpenAI OpenAI Deployment Company OpenAI 4 billion DeployCo OpenAI threatens Indian IT TCS Infosys Wipro AI threat OpenAI engineers in big companies Anthropic vs OpenAI enterprise Indian IT services disruption 2026 OpenAI automating enterprise workflows AI replacing Indian IT outsourcing OpenAI DeployCo impact on TCS OpenAI DeployCo OpenAI 4 OpenAI OpenAI DeployCo OpenAI

OpenAI Deployment Company (DeployCo) என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த புதிய நிறுவனம், பெரிய நிறுவனங்களுக்குள் OpenAI-யின் திறன்மிகக் பொறியாளர்களை அனுப்பி, அவர்களது தினசரி வேலைகளில் AI-யை நேரடியாகப் பயன்படுத்தும் வகையிலும், பணிகளை ஆட்டோமேட் செய்ய உதவும் சேவைகளையும் வழங்க உள்ளது.

உதாரணமாக, ஒரு பெரிய காப்பீட்டு நிறுவனம் ChatGPT-யை வாங்கியிருந்தாலும் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் OpenAI நிறுவனம் 6 முதல் 10 உயர்மட்ட சாப்ட்வேர் இன்ஜினியர்களை 4 மாதங்களுக்கு அந்த நிறுவனத்துக்குள் அனுப்பும்.

அவர்கள் பழைய கணினி அமைப்புகளுடன் AI-யை இணைத்து, மனிதர்கள் செய்யும் உண்மையான வேலைகளை AI செய்யும் வகையில் முழு அமைப்பையே மாற்றி அமைப்பார்கள். இதன் மூலம் பல வேலைகள் ஆட்டோமேட் செய்யப்படும், CHATGPT மாடல்களை நிறுவனங்கள் முழுமையாகவும், திறன்படவும் பயன்படுத்தும்.

இந்த முறை தான் இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த 30 ஆண்டுகளாகச் செய்து வந்தது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் கம்பெனிகளுக்குள் தங்கள் பொறியாளர்களை அனுப்பி, மென்பொருள் நிறுவி, வேலைகளை மேம்படுத்தவும், ஆட்டோமேட் செய்தும் வருகின்றன. இப்போது OpenAI அதே இடத்துக்கு நுழைந்திருப்பது இந்திய ஐடி நிறுவனங்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.

AI IT TCS Infosys OpenAI OpenAI Deployment Company OpenAI 4 billion DeployCo OpenAI threatens Indian IT TCS Infosys Wipro AI threat OpenAI engineers in big companies Anthropic vs OpenAI enterprise Indian IT services disruption 2026 OpenAI automating enterprise workflows AI replacing Indian IT outsourcing OpenAI DeployCo impact on TCS OpenAI DeployCo OpenAI 4 OpenAI OpenAI DeployCo OpenAI

மேலும் இதில் ஆச்சரியம் என்னவென்றால், OpenAI இந்த திட்டத்தை அறிவிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே Anthropic நிறுவனமும் இதே போன்ற ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. ChatGPT-யும் Claude-ம் எது சிறந்த மாடல் என விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், OpenAI மற்றும் Anthropic இரண்டும் அமைதியாக உலகின் மிகப் பெரிய நிறுவனங்களை தங்களது நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றும் வேலையில் இறங்கியுள்ளன.

இந்த AI போட்டி வெறும் சிறந்த ஏஐ மாடலை உருவாக்குவதில் மட்டும் இல்லை, உண்மையான போட்டி என்பது பெரிய நிறுவனங்களின் உள்ளே நுழைந்து, அவர்களது அன்றாட வேலைகளை AI மூலம் மாற்றி அமைப்பதில் ஏற்படும் வெற்றி, உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களை தனது வாடிக்கையாளராக மாற்றுவது தான் முக்கிய இலக்காக உள்ளது.

ஐடி சேவை துறையில் தற்போது ஏஐ நிறுவனங்கள் இறங்கியுள்ளதால், இந்திய ஐடி துறை இதுவரை கட்டிய கோட்டையை புதிதாக வந்த AI நிறுவனங்கள் மொத்தமாக இடித்து தரைமட்டமாக்க உள்ளது.

AI IT TCS Infosys OpenAI OpenAI Deployment Company OpenAI 4 billion DeployCo OpenAI threatens Indian IT TCS Infosys Wipro AI threat OpenAI engineers in big companies Anthropic vs OpenAI enterprise Indian IT services disruption 2026 OpenAI automating enterprise workflows AI replacing Indian IT outsourcing OpenAI DeployCo impact on TCS OpenAI DeployCo OpenAI 4 OpenAI OpenAI DeployCo OpenAI

இந்த திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால், பெரிய நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வேகமாகவும் திறமையாகவும் செய்ய முடியும். ஆனால் இந்திய ஐடி நிறுவனங்கள் நிலை என்ன?

இத்தகைய சூழ்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய மென்பொருளை நிறுவி அதை சிறப்பான முறையில் கையாளுவதில் தங்களை மிஞ்ச யாரும் இல்லை என்பதை காட்ட வேண்டும். இதேவேளையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி OpenAI, Anthropic காட்டிலும் அதிக வர்த்தகத்தை பெற வேண்டும். இதை செய்யாவிட்டால் இந்திய ஐடி துறை நிறுவனங்கள் காணாமல் போகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+