80.6% மாணவிகள்-74.6% மாணவர்கள் தேர்ச்சி491 மதிப்பெண் பெற்று 2 மாணவிகள் முதலிடம்
சென்னை:
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியாயின. 500க்கு 491 மதிப்பெண்கள் எடுத்து இரு மாணவிகள்மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.
மொத்தம் 77.6 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் 80.6 சதவீதமும் மாணவர்கள் சதவீதமும்தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஈரோடு மாணவி ரம்யாவும், நாமக்கல் மாணவி தரணியும் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்பெற்றுள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம் மஞ்சு ரோஜா, திருச்சி மாணவர் பிரசாந்த், சென்னை மாணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் 500க்கு489 மதிப்பெண்களுடன் 2வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
488 மதிப்பெண்கள் பெற்று நாகர்கோவில் மாணவிகள் அனிலின் பியூலா, மீனா குமாரி, கோபிச்செட்டிப்பாளையம் மாணவிநிர்மலா குமார், நாமக்கல் மாணவி சித்ரா, தஞ்சை மாணவி நிறைமதி ஆகியோர் 3வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 77.8 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் சிறிய அளவில்குறைந்து 77.6 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு 2,72,666 மாணவர்களும், 2,91,183 மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர்.கடந்த ஆண்டு மாணவர்கள் 75 சதவீதம் தேர்ச்சியடைந்தனர். அது இந்த ஆண்டு 74.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாணவிகள்கடந்த ஆண்டு 80.8 சதவீதம் தேறினர். இந்த ஆண்டு இது 80.6 சதவீதமாக உள்ளது.
இந்த ஆண்டு 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 52.6 சதவீதமாகும். கணிதப் பாடத்தில் 100க்கு100 எடுத்தவர்கள் எண்ணிக்கை 13,033.
மெட்ரிக்குலேஷன் பள்ளி தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டன. இதில்மதுரை மாணவர் சந்தோஷ் சுப்பிரமணியம் 1,067 மதிப்பெண்களுடன்முதலிடத்தையும், ஒட்டன்சத்திரம் மாணவி மணிமேகலை 1,064 மதிப்பெண்களுடன்இரண்டாவது இடத்தையும், அம்பத்தூர் மாணவி சுனிதா 1,063 மதிப்பெண்களுடன்3வது இடத்தையும் பிடித்தனர்.
பாடவாரியாக முதல் 3 இடம் பிடித்தவர்கள்:
10ம் வகுப்பு தேர்வில் பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ,மாணவியர்கள் விவரம்:
தமிழ்:
1. எம்.ரம்யா, அரசு மேல்நிலைப்பள்ளி, அதிகாரப்பட்டி, தர்மபுரி - 99
2. ஏ.ரம்யா, கலைமகள் கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி, ஈரோடு - 98
3. ஸ்ரீரஞ்சனி, ஐ.எச்.எம். மகளிர் பள்ளி, ஆவடி - 98
ஆங்கிலம்:
1. ராஜு, ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி - 97
2. சிந்து பிரியங்கா, ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர் - 97
3. குமார சஷிதரா, ஸ்பிக் நகர் மேல்நிலைப்பளளி, தூத்துக்குடி - 97
கணிதம்: (மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில்)
1. ஏ.ரம்யா, கலைமகள் கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி, ஈரோடு- 100
1. தரணி, வி.வி.பெண்கள் மேல்நிலைப்பளளி, திருச்செங்கோடு - 100
2. மஞ்சு ரோஜா, ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர் - 100
2. பிரசாந்த், ஈ.ஆர்.மேல்நிலைப்பள்ளி, திருச்சி - 100
2. கிருஷ்ணமூர்த்தி, சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மைலாப்பூர் - 100
2. அன்னிலின் பியூலா, நாகர்கோவில் - 100
3. மீனாகுமாரி, செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில் - 100
3. நிர்மலா குமார், ஐடியல் மேல்நிலைப்பள்ளி, கோபிச்செட்டிப்பாளையம் - 100
3. பவித்ரா, வி.வி. மகளிர் பள்ளி, திருச்செங்கோடு - 100
3. நிறைமதி, சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் - 100
அறிவியல்: (மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில்)
1. தரணி, வி.வி. மகளிர் மேல்நலைப்பள்ளி, திருச்செங்கோடு - 100
2. மஞ்சு ரோஜா, ஆதர்ஷ் வித்யாலயா, அந்தியூர் - 100
2. பிரசாந்த், பி.ஆர். மேல்நிலைப்பள்ளி, திருச்சி - 100
3. அன்னிலின் பியூலா, செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில் - 100
3. பவித்ரா, வி.வி. மகளிர்பள்ளி, திருச்செங்கோடு - 100
3. நிறைமதி, சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் - 100
சமூக அறிவியல்: (மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில்)
1. ஏ.ரம்யா, கலைமகள் கல்வி நிலைய மேல்நிலைப்பள்ளி, ஈரோடு - 100
1. தரணி, வி.வி. மகளிர் பள்ளி, திருச்செங்கோடு - 100
2. நிர்மலா குமார், ஐடியல் மேல்நிலைப்பள்ளி, கோபிச்செட்டிப்பாளையம் -100
2. பவித்ரா, வி.வி. பள்ளி, திருச்செங்கோடு - 100
3. ஸ்ரீரஞ்சனி, ஐ.எச்.எம். மகளிர் பள்ளி, ஆவடி - 100
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications