தமிழகத்திற்கு ரூ. 12,500 கோடி ஒதுக்கீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நடப்பு ஆண்டுக்கான, தமிழக திட்டப் பணிகளுக்கு மத்திய திட்டக் குழு ரூ. 12,500கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளது.
முதல்வர் கருணாநிதி இன்று டெல்லியில் மத்திய திட்டக் குழுத் துணைத் தலைவர்மாண்டேக் சிங் அலுவாலியாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது, நிதிஅமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலாளர் திரிபாதி, நிதித்துறைச் செயலாளர்,மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.சந்திப்பின்போது தமிழகத்திற்கு நடப்பு ஆண்டுக்கான திட்டப் பணிகளுக்குஒதுக்கப்படவுள்ள நிதி குறித்து முதல்வரும், அலுவாலியாவும் ஆலோசனைநடத்தினர். அப்போது, கடந்த ஆண்டை விட இம்முறை கூடுதல் நிதியைதமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று கருணாநிதி கோரினார். அவரதுகோரிக்கையை அலுவாலியா ஏற்றுக் கொண்டார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் தமிழகத்திற்கு ரூ. 12,500 கோடியை ஒதுக்க திட்டக்கமிஷன் முடிவு செய்தது. இது கடந்த ஆண்டை விட ரூ. 3500 கோடி கூடுதலாகும்.












Click it and Unblock the Notifications