கருணாநிதிக்கு மத்திய அரசு பரிசு-வைகோ கிண்டல்
சென்னை:
முதல்வர் கருணாநிதி டெல்லி சென்றுள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைஉயர்த்தி அவருக்கு பரிசு கொடுத்துள்ளது மத்திய அரசு என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர, சாமானிய மக்களின் சுமையை மேலும்அதிகரிக்கும்.
மாநில அரசு விற்பனை வரியைக் குறைத்து பெட்ரோல், டீசல் விலை குறைப்புசெய்யலாம் என கடந்த ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு யோசனைதெரிவித்தார் கருணாநிதி.
இப்போது அவர் விற்பனை வரியைக் குறைக்க உத்தரவிடுவாரா?
பெட்ரோல், டீசல் விலை உயர்வு சரி, அதை எதிர்த்து இடது சாரிக் கட்சிகள்அறிவித்துள்ள போராட்டமும் சரி என்று கருணாநிதி கூறியிருப்பது மக்களைஏமாற்றும் செயல்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உடனடிாயகத் திரும்பப் பெற வேண்டும்என்று கூறியுள்ளார் வைகோ.
விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் விடுத்துள்ளஅறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவிக்கும்வகையில் மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை, இடது சாரிக் கட்சிகள்திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications