லாரி அதிபர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
மத்திய அரசு உடனடியாக டீசல் விலையைக் குறைக்காவிட்டால் வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதிக்கப் போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக சங்கத் தலைவர் செங்கோடன் கூறுகையில், இந்தியா முழுவதும் 3கோடி லாரிகள் உள்ளன. தமிழகத்தில் 1லட்சம் லாரிகள் உள்ளன. டீசல் விலைஉயர்வால் லாரி தொழில் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 9 முறை டீசல் விலையை உயர்த்தியுள்ளனர்.இதனால் தொழிலை செய்ய முடியாத அளவுக்கு கடும் பாதிப்பை நாங்கள் சந்தித்துவருகிறோம்.
இப்படி அடிக்கடி டீசல் விலையை உயர்த்துவது எங்களது தொழிலுக்கு கடும்பாதிப்பை கொடுக்கிறது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு முன்வராவிட்டால் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை என்றார்செங்கோடன்.












Click it and Unblock the Notifications