கால்பந்து: எஸ்சிவி-ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மோதல்
சென்னை:
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை இலவசமாக காட்டுவோம் என்றுஎஸ்.சி.வி. நிறுவனமும், எங்களிடம் இதுதொடர்பாக எஸ்.சி.வி. நிறுவனம் அனுமதிபெறவில்லை, ஒப்பந்தமும் செய்யவில்லை, எனவே செட் டாப் பாக்ஸ் இல்லாமல்சென்னை மக்களால் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகளைக் காண முடியாதுஎன்று ஈஎஸ்பிஎன்-ஸ்டார் போர்டஸ் நிறுவனமும் அறிவித்துள்ளதால் கால்பந்துரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் 9ம் தேதி தொடங்குகிறது.உலகக் கோப்பைக் கால்பந்து போட்டிகள் ஜெர்மனியில் இன்று தொடங்குகிறது.இப்போட்டிகளை கண்டு ரசிக்க பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஜெர்மனியில்குழுமியுள்ளனர்.தொலைக்காட்சி மூலம் ரசிக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும்தயாராகி வருகின்றனர். இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் தொலைக்காட்சிமூலம் கால்பந்துப் போட்டிகளை பார்க்க முடியும்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக சென்னை நகரில் மட்டும் இப்போட்டிகளை செட் டாப்பாக்ஸ் இருந்தால்தான் காண முடியும் என்ற அவலம் நிலவுகிறது.
செட் டாப் பாக்ஸ் இல்லாதவர்களால் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளைக்காண முடியாது. சென்னை நகரின் பெரும்பாலான கேபிள் இணைப்புகளை தன் வசம்வைத்திருக்கும் சன் டிவி குழுமத்திற்கு உட்பட்ட எஸ்.சி.வி. நிறுவனம் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை அனைவரும் காண வசதியாக போட்டிகளைஒளிபரப்பும் ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சியை இலவசமாக காட்ட வேண்டும் என்றகோரிக்கை எழுந்தது.
இதனால் 9ம் தேதி முதல் இறுதிப் போட்டி வரையிலான அனைத்து உலகக் கோப்பைகால்பந்துப் போட்டிகளையும் இலவசமாக காட்டப் போவதாக எஸ்.சி.வி. நிறுவனம்அறிவித்துள்ளது.
இதற்கு ஈ.எஸ்.பி.என். நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகநிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் ஸ்ரீசரன் அய்யங்கார் தெரிவிக்கையிைல்,இலவசமாக எங்களது தொலைக்காட்சியைக் காட்ட எஸ்.சி.வி. நிறுவனத்திறகுநாங்கள் அனுமதி கொடுக்கவில்லை.
இதுதொடர்பாக எந்தவித ஒப்பந்தம் கையெழுத்திடவில்லை. அப்படி இருக்கையில்,ஈ.எஸ்.பி.என். நிகழ்ச்சிகளை எஸ்.சி.வியால் இலவசமாக காட்ட முடியாது.
செட் டாப் பாக்ஸ் இருந்தால் மட்டுமே உலகக் கோப்பைப் போட்டிகளை சென்னைரசிகர்கள் பார்க்க முடியும் என்றார்.
ஆனால் இதை சன் டிவி குழுமம் மறுத்துள்ளது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர்இதுகுறித்துக் கூறுகையில், கால்பந்துப் போட்டிகளைக் காட்டுவது தொடர்பாகஈ.எஸ்.பி.என நிறுவன அதிகாரிகளுடன் வாய் மூலமாக பேசி விட்டோம்.
ஆனால் இப்போது அவர்கள் மறுக்கிறார்கள். எங்களிடமிருந்து அதிக அளவில் பணம்பெறவே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள் என நினைக்கிறோம்.
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளை இலவசமாக காட்டுவதால்,வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்றார் அவர்.
இவர்களில் யார் சொல்வது உண்மை, கால்பந்துப் போட்டிகளைப் பார்க்க முடியுமா,முடியாதா என்று சென்னை கால்பந்து ரசிகர்கள் மண்டை காய்ந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications