பெங்களூர் விப்ரோ, இன்போசிஸில் கருணாநிதி!
பெங்களூர்:
முதல்வர் கருணாநிதி இன்று பெங்களூரில் விப்ரோ சாப்டவேர் நிறுவன தலைமையகத்துக்குச் சென்றார். அங்குவிப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜியுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்போசிஸ்நிறுவனத்துக்கும் கருணாநிதி சென்றார்.
தமிழகத்தில் விப்ரோவின் செயல்பாடுகளை விரிவாக்கக் கோரிய கருணாநிதி, அதற்குத் தேவையானஅடிப்படைக் கட்டமைப்பு உதவிகளைச் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,
தமிழகத்தில் சாப்ட்வேர் புரட்சியை ஏற்படுத்துவோம். இதற்காக புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கைவிரைவில் அறிவிக்கப்படும்.
மேலும் சாப்ட்வேர் நிறுவனங்களின் பிரச்சனைகளைக் கலைய தனித் துறை உருவாக்கப்படும். குறிப்பாக இந்தநிறுவனங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்க இந்தத் துறைஉதவும்.
அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்களை மதுரை, கோயம்புத்தூர், ஒசூர், திருநெல்வேலிஉள்ளிட்ட இரண்டாம் நிலை நகர்களுக்கும் கொண்டு செல்ல திட்டங்கள் தீட்டப்படும்.
சாப்ட்வேர் துறையில் பெங்களூர் அடைந்துள்ள அதே அளவு முன்னேற்றத்தை சென்னையும் அடையும்வகையில் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார்.
கருணாநிதியுடன் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறனும் சென்றார்.
பின்னர் இன்போசிஸ் சென்ற கருணாநிதி அந்த நிறுவனத்தை சுற்றிப் பார்த்தார். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம்பேசுகையில்,
தகவல் தொழில்நுட்பத் துறை சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.சாப்ட்வேர் துறையில் கர்நாடகத்துக்கு இணையாக அல்லது அதைவிடச் சிறந்த மாநிலமாக தமிழகத்தைஉருவாக்குவோம்.
ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்றுவோம் என்று அறிவித்திருந்தோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்து நாள் கணக்கில்தான் ஆகிறது. விரைவில் ஓசூரை தகவல்தொழில்நுட்ப மையமாக மாற்றும் எங்களது அறிவிப்பு செயல்வடிவம் பெறும் என்றார்.
பின்னர் இன்போசிஸ் நிறுவன மனித வளத்துறைத் தலைவர் மோகன் தாஸ் பை நிருபர்களிடம் பேசுகையில்,
சென்னை மகிந்திரா சிட்டியில் மிகப் பெரிய கிளையை இன்போசிஸ் தொடங்கவுள்ளது. 125 ஏக்கரில் ரூ. 1,250கோடி செலவில் அந்த கிளை அமையும். சென்னையும் ஹைதராபாத்தும் தான் சாப்ட்வேர் துறையில் இப்போதுமிக வேகமான வளர்ச்சியை அடைந்து வருகின்றன.
சென்னையில் உள்ள இன்போசிஸ் கிளைகளுக்கு இந்த ஆண்டில் மேலும் 5,000 பேர் சேர்க்கப்படுவார்கள்.அடுத்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் 25,000 வேலை வாய்ப்புகளை இன்போசிஸ் உருவாக்கும் என்றார்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா :
முன்னதாக ஸ்டாலின் மீதான தாக்குதல் குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதெல்லாம் அரசியலில் சகஜம். எதிர்பார்க்கவேண்டியதுதான் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications