For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கணவனை கொன்றது எப்படி-நடித்து காட்டிய மேரி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கள்ளக் காதலனின் தூண்டுதலோடு தனது கணவரை கொலை செய்தது எப்படி என்று போலீசார் முன்னிலையில்நடித்துக் காட்டினர் மேரி சேவியர்.

தனது கணவரை கொடூரமாக கொலை செய்தற்காக கள்ளக் காலனுடன் சேர்ந்து இப்போது கம்பிஎண்ணிக்கொண்டிருக்கிறார் மேரி.

சென்னை மாதவரம் அஜீஸ் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்நாதன் முகப்பேரில் உள்ள தொண்டுநிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வந்தார். இவரை இவரது மனைவி மேரி சேவியர் கொலை செய்தார்.இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு அந்தோணி இருதயராஜ் என்ற மகனும், ஏஞ்சலின் மேரி என்ற மகளும் உள்ளனர்.

கொலை குறித்து விரிவாகவே வாக்குமூலம் தந்துள்ள மேரி, கொலை எப்படிச் செய்தார் என்றும் போலீசார் முன்நடித்துக் காட்டினார்.

Mary with her Son

போலீசாரிடம் மேரி சேவியர் அளித்த வாக்குமூலம்:

நான் சென்னை ராயபுரத்தில் தான் பிறந்து வளர்ந்தேன். 1992ம் ஆண்டு ராயபுரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2முடித்தேன். அதே பள்ளியில் 94ல் ஆசிரியர் பயிற்சி முடித்தேன். அப்பா இருதயராஜ் ராணுவ அதிகாரியாகஇருந்தார்.

ஒய்வு பெற்ற பின்னர் துறைமுகத்தில் வேலை செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பா இறந்து விட்டார்.அம்மா பாத்திமா மேரி, தங்கை ஆரோக்கிய மேரி. இவர் ஆசிரியர் பயிற்சி படித்து வருகிறார். தம்பி மாசிலாமணி.எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார்.

என்னுடைய அம்மாவின் சொந்த தம்பிதான் அருள்நாதன். என்னை விட 12 வயது மூத்தவர், அவரை மாமாஎன்று அழைப்பேன். ஆனால் அவருக்கு என் மீது ஆசை இருந்தது.

இதனால் நான் படிக்கும் போது அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஒருநாள் இதே போல வீட்டுக்கு வந்தபோது நான்மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். அதைப் பயன்படுத்தி என்னுடன் உறவு கொண்டார். அதை என்னால்தடுக்க முடியவில்லை.

பின்னர் என்னை திருமணம் செய்யும்படி வற்புறத்தினார். எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் பெற்றோரிடம்சொல்லி திருமணம் செய்து கொண்டார்.

Mary with Doss

திருமணத்துக்குப் பின்னரும் நாங்கள் கணவன், மனைவியாக வாழவில்லை. தேவையானபோது என்னைவற்புறுத்தி சந்தோசமாக இருப்பார். எங்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. கடைசி குழந்தை இரண்டரைஆண்டுக்ளுக்கு முன்னர் பிறந்தது.

அதன் பின்னர் நானும், அவரும் சந்தோஷமாக இருந்தது இல்லை. 1996 ஆண்டு என் குடும்பச் சொத்தைப்பிரித்ததில் வந்த பணத்தைக் கொண்டு இப்போது நாங்கள் இருக்கும் இடத்தை வாங்கினோம். அதை என்பெயருக்கு எழுதித் தருவதாகச் சொன்னார்.

ஆனால் தன் பெயருக்கு எழுதி வாங்கிக் கொண்டார். அது முதல் எங்களுக்குள் இருந்த கொஞ்ச நஞ்ச உறவும்அறுந்துவிட்டது. பின்னர் எனக்கு மாதவரம் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஆசிரியரை வேலைகிடைத்தது.

அப்பா இறந்த பின்னர் அவருக்கு வந்த ஓய்வூதியப் பணத்தை நம்பித்தான் குடும்பம் இருந்தது. இதனால் எனக்குகிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு கும்பத்துக்கும் உதவி செய்தேன். ஊனமான தங்கை, வேலையில்லாத தம்பி,நோயால் பாதிக்கப்பட்ட அம்மா என வறுமையில் வாடிய அவர்களுக்கு நான் உதவியாக இருந்தேன்.

ஆனால், அவர்களுக்கு பண உதவி செய்வதை என் கணவர் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடிதகராறு ஏற்படும். பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து எங்களை சமாதானப்படுத்தவார்கள். இந்த நிலையில்தான் அருள்நாதனின் சொந்த ஊரான கிருஷ்ணகிரியில் இருந்து அவரது உறவினர் தாஸ் சென்னைக்கு வந்தார்.

அவர் எனக்கு மகன் முறை வேண்டும். ஆனால் இரண்டு பேருக்கும் வயது ஒன்று தான். அவர் வேலை இல்லாமல்இருந்தார். பிளஸ் 2 முடித்ததும், 3 மாதம் கம்ப்யூட்டர் டிப்ளமோ முடித்துள்ளார்.

Mary with Doss

என் கணவர் தான் அவரை சென்னைக்கு அழைத்து வந்தார். அருள்நாதனின் பெரியம்மா வீடு அருகில்தான்உள்ளது. அங்கு உள்ள வீட்டில் தாஸை தங்க வைத்தார். தாஸ் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார்.

எனக்கும் கணவருக்கும் பிரச்னை இருப்பது அவருக்குத் தெரிந்தது. அப்போது எனக்கு ஆறுதல் கூறினார்.இதனால் அவரை எனக்குப் பிடித்துவிட்டது. காலையில் பள்ளிக்குச் செல்லும்போது கணவர் வண்டியில்அழைத்துச் செல்வார்.

மாலையில் நான் தனியாக வீட்டுக்கு வருவேன். தாசும் தனியாக இருந்ததால் அவரை பார்க்க வீட்டுக்குச் சென்றுவிட்டு வருவேன். எங்களுக்குள் காதல் ஏற்பட்டதால் அடிக்கடி தனியாக சந்தித்துக் கொண்டோம்.

என்னுடைய மாமியார் சவரியம்மாள் எங்கள் வீட்டில் இருந்தார். இதனால் தாஸ் வீட்டுக்கு வந்தால் என்னை சித்திஎன்றுதான் அழைப்பார். நானும் அதே போல நடந்து கொள்வோன். மாலையில் அவரது வீட்டுக்குச் சென்றால்நாங்கள் கள்ளக்காதலில் ஈடுபடுவோம்.

நான் தாஸ் வீட்டுக்குச் சென்றதும் கதவை பூட்டிக்கொண்டு உல்லாசமாக இருப்போம். இதை வீட்டு உரிமையாளர்பார்த்துக் கண்டித்தார். நானோ எனக்கு மகன் முறை வேண்டும். குடும்ப பிரச்னைக்ளை பேசுவோம். தவறாகநினைக்க வேண்டாம் என்று கூறி விட்டேன்.

இந்த நிலையில் கடந்த 7ம் தேதி மாமியார் இறந்து விட்டார். அதன்பின்னர் எங்களுக்கு பிரச்னை இல்லை.அடிக்கடி என் வீட்டிலேயே நானும் தாஸூம் சந்தித்துக் கொண்டோம். பள்ளிக்குச் செல்வதாக கூறி விட்டுசினிமாவுக்குச் சென்றுள்ளோம்.

என்னுடைய சம்பளத்தை தாஸூக்கு கொடுத்தேன். எங்களது உறவு அருள்நாதனுக்குத் தெரியவந்ததும்கண்டித்தார். அப்போது தான் பேசாமல் அருள்நாதனை விவாகரத்து வாங்கி விட்டு வா. நான் 2வது திருமணம்செய்து கொள்கிறேன் என்று தாஸ் கூறினார்.

இதற்காக என்னுடைய நகையை அடமானம் வைத்து கலர் மீன் விற்பனை செய்யும் கடை வைத்துக் கொடுத்தேன்.என்னுடைய கணவர் இருந்தால் கள்ளக் காதலுக்கு பிரச்னை ஏற்படும் என்று அவரை கொலை செய்யதீர்மானித்தோம்.

ஒரு டாக்டரிடம் சென்று தலை வலிக்கிறது. தூக்கம் வரவில்லை என்று சொன்னேன். அவர் தூக்க மாத்திரை 2வாங்கிச் சாப்பிடும்படி எழுதி கொடுத்தார். அந்த ஒரு பேப்பரைக் கொண்டு 10க்கும் மேற்பட்ட கடைகளில் 25மாத்திரைகளை வாங்கினோம்.

அதை சாப்பாட்டில் கலந்து கொடுத்தேன். சாப்பாடு கசக்கிறது என்றார் என் கணவர். உங்கள் வாய் கசப்பாகஇருக்கும் என்றேன். இதனால் பேரீச்சம்பழம் சாப்பிட்டார். பின்னர் தூங்கி விட்டார். சந்தேகப்பட்டு எழுப்பினேன்.

அவர் எழுந்திருக்கவில்லை. இதை தாஸிடம் தெரிவித்தேன். முகத்தில் தண்ணீர் அடிக்கச் சொன்னார். அடித்தேன்,முகத்தில் அசைவு இல்லை. பின்னர் தலையணை மூலம் அமுக்கினேன். அதன் பின்னர் தாசும் வந்தார். மரணத்தைஉறுதி செய்து கொள்ள இரும்பு குழாயால் தலையில் அடித்தார். அதில் என் கணவர் இறந்துவிட்டார்.

12 வருடமான நான் எனக்காக வாழ்ந்ததே இல்லை. அவரிடம் அடிமையாகவே வாழ்ந்தேன். என் சுக,துக்கங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை. அடிமையாய் வாழ்ந்தேன். இனி என் வாழ்க்கை தாசுடன் தான்.அவரை நான் முறைப்படி திருமணம் செய்வேன். கணவன், மனைவியாக வாழ்வோம். சிறையில் ஒன்றாகவேதண்டனையை அனுபவிப்பேன். ஒரு வாழ்க்கை தான் முடிந்துவிட்டது. இனி மறு பிறவி எடுப்பேன்.

என் உறவுகள், இந்த சமூகம் இதைப் பற்றியெல்லாம் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் துன்பங்களைபகிர்ந்து கொள்ளாத யாரைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை.

இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார் மேரி.

இந் நிலையில் அருள்நாதனின் உடல் நேற்று சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.காலையில் உறவினர்கள், அம்மா, சகோதரி யாரும் போலீஸ் நிலையத்துக்கு வந்து மேரியை பார்க்க வரவில்லை.

இதனால் மன உடைந்த மேரி போலீஸ் நிலையத்தில் கதறி அழ ஆரம்பித்தார். பிள்ளைகளைப் பிரிந்து,உறவினர்களை இழந்து எப்படித்தான் வாழப் போகிறேனோ, தெரியவில்லை. தவறு செய்துவிட்டேன் என்று கதறிஅழுதார்.

அதைத் தொடர்நத்து அருள்நாதனை எப்படிக் கொலை செய்தேன் என்று தன்னுடைய வீட்டில் போலீசார்முன்னிலையில் நடித்துக் காட்டினார். அதை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட மேரி காவலில் வைக்கப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X