அகதிகள் நிலை: உணர்ச்சிவயப்பட்ட அமைச்சர்கள்-கண்கலங்கிய கருணாநிதி
சென்னை:
இலங்கை அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும்என்று முதல்வர் கருணாநிதியிடம் தமிழக அமைச்சர் குழு பரிந்துரை செய்துள்ளது.
இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம்உள்ளது. இந் நிலையில் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் அடிப்படைவசதிகள் இல்லை. கட்டடங்கள் பாழடைந்து போய் உள்ளன.அவர்களுக்கு உரிய வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைவலுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன், இந்துஅறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோரைக் கொண்ட குழுவைஅமைத்த கருணாநிதி, இருவரையும் அகதிகள் முகாம்களுக்குச் சென்று ஆராய்ந்து,முகாம்களின் தற்போதைய நிலை, அகதிகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்என்பது குறித்து ஆராய உத்தரவிட்டார்.
இதையடுத்து இரு அமைச்சர்களும் மண்டபம் முகாம் உள்பட தமிழகத்தில் உள்ளபல்வேறு அகதிகள் முகாம்களுக்கும் சென்று ஆய்வு நடத்தினர்.
ஆய்வை முடித்து விட்ட அமைச்சர்கள் அதுதொடர்பான பரிந்துரை அறிக்கையைகருணாநிதியிடம் வழங்கியுள்ளனர். அதில் ஏராளமான பரிந்துரைகளை இருஅமைச்சர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 103 அகதிகள் முகாம்களிலும் அடிப்படை வசதிகள் சரிவரஇல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அகதிகளுக்காக புதிதாக 50,000 வீடுகளைக் கட்டித் தர வேண்டும் என்றும்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மண்டபம் முகாமில் 2,000 வீடுகள் உள்ளன. ஆனால் இவற்றில் பாதி வீடுகள் படுமோசமான நிலையில் உள்ளன. தரை எல்லாம் பெயர்ந்துவிட்டது. வெறும் மண் தான்தரை. பல வீடுகளுக்கு கூரையே இல்லை.
மழைக் காலங்களில் இங்கு வசிப்பது மிகவும் கடினம். அதிலும் குழந்தைகள்,பெண்களின் நிலைமை தான் மிகவும் மோசம் என்றும் அமைச்சர்கள்தெரிவித்துள்ளனர்.
கழிப்பறைகள் எல்லாம் உடைந்து, சிதிலமடைந்து கிடக்கின்றன. குடிநீர், மின்சாரம்உள்ளிட்ட அடிப்படை வசதிகள் படு மோசமாக உள்ளன. அகதிகள் மிகவும் சிரமமானநிலையில் தான் இங்கு வசித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பட ஆதரங்களுடன் கூடிய இந்த அறிக்கையை கருணாநிதியிடம் தந்தனர்.
மேலும் அந்த மக்கள் படும் துன்பங்களை கருணாநிதியிடம் விவரித்தபோது பெரியகருப்பண் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு கண் கலங்கியதாகவும், சுப.தங்கவேலன்கண்ணாடியைக் கழற்றிவிட்டு கண்ணீரே விட்டதாகவும் கூறப்படுகிறது.அமைச்சர்களைப் பார்த்த கருணாநிதியும் கண் கலங்கியுள்ளார்.
மொத்தம் உள்ள 53,000 அகதிகளுக்கும் வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் அவர்களின்அவல நிலைக்கு முடிவு கட்ட ஒரே வழி என்பதை சுப.தங்கவேலன் உறுதியாகத்தெரிவித்துள்ளார்ே.
அதேபோல அகதிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் நிதியுதவியையும்அதிகரிக்க வேண்டும் என்று பெரியகருப்பண் பரிந்துரைத்துள்ளார்.
தற்போது அகதிகளுக்கு மாதம் ரூ. 150 முதல் ரூ. 250 வரை வழங்கப்பட்டு வருகிறது.இது நிச்சயம் அகதிகளின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதாது என்றுஅமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அகதிகள் தரப்பில் வைக்கப்பட்ட முக்கியக் கோரிக்கை ஒன்றையும் அரசு கனிவுடன்பரிசீலிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு கஷ்டத்துக்கு மத்தியிலும் பல அகதிகளின் குழந்தைகள் மிகச் சிறப்பாகபடிப்பது தான் அமைச்சர்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது. பள்ளிகளில் பிறமாணவர்களை இவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதித்து வருகின்றனர்.
எனவே தங்கள் குழந்தைகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்என்று அகதிகள் கோரியுள்ளனர்.
உயர் கல்வியில் இட ஒதுக்கீடு அளித்தால் இவர்கள் மிகச் கல்வியைப் பெற முடியும்என அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
மண்டபம் முகாமைச் சேர்ந்த ஒரு அகதியின் மகன் பிளஸ் டூவில் 1,130மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் உயர் கல்வி கற்க அவருக்கு வசதி இல்லை.இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டால் அரசு உதவியுடன் மருத்துவம் படிக்க அந்தமாணவன் ஆசையாக உள்ளாராம்.
இதுகுறித்து கருணாநிதியிடம் அமைச்சர்கள் விளக்கியபோது ஆச்சரியத்துடன் கேட்டுக்கொண்டாராம். அந்த மாணவனுக்கு உதவ வேண்டும் என்று தனிப்பட்ட முறையிலும்கருணாநிதியிடம் அமைச்சர்கள் கோரினராம்.
15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர்கருணாநிதி விவாதித்து வருகிறார். விரைவில் இதுதொடர்பான முக்கிய அறிவிப்பைஅவர் வெளியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர்களின் அறிக்கையைப் பார்த்த இலங்கை விஷயத்தில் இனியும் அமைதிகாப்பதில் அர்த்தமில்லை என்று பிரதமருடன் கருணாநிதி தொலைபேசியில்பேசியதாகவும் தெரிகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications