கலர் டிவி திட்டக் குழு: அதிமுக, மதிமுக இடம்பெறவில்லை!
சென்னை:
தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு சார்பில்அமைக்கப்படவுள்ள அனைத்துக் கட்சிக் குழுவில் அதிமுகவும், மதிமுகவும் இடம்பெற விரும்பவில்லை என்று பதில் வந்துள்ளதாக முதல்வர் கருணாநிதிதெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தைஅமல்படுத்த அனைத்துக் கட்சிக் குழுக்களை அமைக்க முதல்வர் கருணாநிதி முடிவுசெய்துள்ளார்.இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினரின் பெயரை பரிந்துரைக்குமாறு கோரிஅனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கருணாநிதியே கைப்பட கடிதம்எழுதியிருந்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதி எழுதிய கடிதம்அனுப்பப்பட்டது. இந்தக் கடிதத்திற்கு அனைத்துக் கட்சிகளிலிருந்தும் பதில் வந்துவிட்டதா என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டபோது, அனைத்துசட்டமன்ற கட்சிகளுக்கும் அரசின் சார்பில் கடிதம் எழுதியிருந்தோம்.
குழுவில் பங்கேற்க முடியாது என்று அதிமுக தரப்பில் கூறியுள்ளார்கள். ஜெயலலிதாஅனுப்பியுள்ள பதில் கடிதத்தில், வீடு தோறும் இலவச வண்ணத் தொலைக்காட்சிபெட்டி வழங்கும் திட்டம், நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத திட்டம் என்பதேஎங்களுடைய ஆழ்ந்த நம்பிக்கையாகும்.
இந்தத் திட்டம் நிறைவேற்ற இயலாத திட்டம் என்பது எங்களது கட்சியின்நிலைப்பாடு. எனவே தெரிந்தே மக்களை ஏமாற்றும் இந்தத் திட்டத்திற்கான குழுவில்அதிமுக சார்பில் சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் யாரும் இடம் பெற மாட்டார்கள்என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதேபோல மதிமுக சார்பில் கண்ணப்பன் எழுதியுள்ள பதில் கடிதத்தில், தமிழகம்உரிய வளர்ச்சி பெறவும், தேவையான நிதி, அதற்குப் பயன்படாமல்,தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிலை மக்கள் நலனுக்குவிரோதமானது ஆகும்.
மக்களை ஏமாற்றும் வேலையாகவே இது அமையும். எனவே மதிமுக சார்பில் எவரும்இதில் இடம் பெற மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியின் சட்டமன்றத் தலைவர்செல்வம் குழுவில் இடம்பெறுகிறார். இதுகுறித்து அக்கட்சியின் சார்பில்எழுதப்பட்டுள்ள கடிதத்தில், குழு அமைப்பது குறித்து மகிழ்ந்தோம்.
மங்களூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராகிய கு.செல்வம் ஆகிய என்னைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் குழுவில் இடம் பெறச் செய்ய வேண்டும்என்று கூறியுள்ளனர்.
விஜயகாந்த்தும் பதில் அனுப்பியுள்ளார். அவரது பதிலில், குழுவின் உறுப்பினராகசெயல்பட தேமுதிக உறுப்பினர் என்ற முறையில், என்னை அழைத்தமைக்குநன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எங்களது கட்சியின் சார்பாக சட்டமன்றத்தில் நான் ஒருவனே இருப்பதாலும்,கட்சியின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள மாநிலம்முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாலும், இக்குழுவில் இடம் பெறஇயலாத நிலையில் உள்ளேன் எனபதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறியிருக்கிறார்கள்.
இவர்கள் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் திமுக உள்பட விருப்பம் தெரிவித்து அந்தகுழுவிலே இடம் பெற்றிருக்கிறார்கள் என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications