சிவாஜியை வாங்கியதா சன் டிவி?
சென்னை:
ரஜினி நடிப்பில் உருவாகி வரும் சிவாஜி படத்தின் டிவி உரிமையை சன் டிவி வாங்கிவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆனால் இச்செய்தியை ஏவி.எம். நிறுவனமும்,சன் டிவியும் மறுத்துள்ளன.
![]() |
ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில், ரஜினி நடிப்பில்உருவாகி வரும் படம் சிவாஜி. மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்படும் இப்படம்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில் சிவாஜி படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி வாங்கிவிட்டதாக செய்திகள் கசிகின்றன. இதுதொடர்பாக ஏவி.எம். நிறுவனத்துடன், சன் டிவிநிர்வாகம் சார்பில் ஒப்பந்தம் போட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
சன் டிவியில் ஏவி.எம். நிறுவனம் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களைஒளிபரப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
அந்த நட்பின் அடிப்படையில், சிவாஜி பட உரிமையை சன் டிவி வாங்கி விட்டதாகத்தெரிகிறது.
ஆனால் இச்செய்தியை ஏவி.எம். நிறுவனம், சன் டிவியும் மறுத்துள்ளன.இதுதொடர்பாக ஏவி.எம். சரவணன், எம்.எஸ்.குகன் மற்றும் சன் டிவி நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவாஜி படத்தின் முழு உரிமைகளையும் சன் டிவி வாங்கி விட்டதாக வெளியாகும்தகவல்கள் தவறானவை.
![]() |
படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் வியாபாரம் என்பதால் இதுவரை சிவாஜி படத்தின்வியாபாரம் பற்றி பேசவே இல்லை. படப்பிடிப்பு முடியும் வரை பேசப் போவதும்இல்லை. எனவே சிவாஜி குறித்த தகவல்களில் உண்மை இல்லை என்று கூறியுள்ளனர்.
ரஜினியின் முந்தைய சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி உரிமையை வாங்கசன்டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
அப்போது அதிக ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால், ஆட்சி அதிகாரத்தை வைத்துநெருக்கடி கொடுத்து ஜெயா டிவி சந்திரமுகியை கைப்பற்ற முயற்சித்தது.
ஆனால் சன் டிவி பெரும் விலை தந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.படமும் சன் டிவி வசமே சென்றது.
இந் நிலையில், இப்போது படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே சிவாஜி படம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.















Click it and Unblock the Notifications