கருணாநிதியுடன் டி.சி.எஸ். நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியை, டாடா கன்சல்டன்சி நிறுவன நிர்வாகிகள் இன்று சந்தித்துப்பேசினர்.
மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை சமீபத்தில் டாடா குழுத் தலைவர் ரத்தன் டாடாடெல்லியில் சந்தித்துப் பேசினார். அடுத்த நாள், சென்னைக்கு வந்த டாடா வீட்டு வசதிநிறுவன நிர்வாகிகள் தயாநிதி மாறனை சந்தித்து தமிழகத்தில் தொழில் முதலீடுகளைமேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.இந் நிலையில் இன்று டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ்நிறுவன தலைவர் ராமதுரை தலைமையில் அந் நிறுவன நிர்வாகிகள் முதல்வர்கருணாநிதியை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராமதுரை பேசுகையில்,
![]() |
தமிழகத்தில் டிசிஎஸ்சின் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாகவும் டிசிஎஸ்ஸைவிரிவாக்குவது தொடர்பாகவும் முதல்வருடன் ஆலோசித்தோம். தொடர்ந்துபேசுவோம் என்றார்.
இதேபோல, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலேவும்முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்தார். தனது நீண்டநாள் நண்பரான கருணாநிதியை சந்திக்க வந்ததாக அந்துலே தெரிவித்தார்.
இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதர் டேவிட் கூப்பரும் முதல்வரை இன்றுசந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
நூலகங்களுக்கு 1000 பிரதிகள்:
இதற்கிடையே அரசு பொது நூலகங்களுக்கு வாங்கப்படும் நூல்களின் அளவை 1000பிரதிகளாக அதிகரிக்கமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் பொது நூலகத் துறையின் கீழ் இயங்கும் பொது நூலகங்களுக்குஆண்டுதோறும் நூல்கள் வாங்கப்படுகின்றன.
கடந்த மே மாதம் நடந்த சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து முதல்வர்பேசுகையில், நூலகங்களில் வாங்கப்படுகின்ற புதிய நூல்களின் பிரதிகள் அதிகபட்சம்750 படிகள்தான் வாங்கப்படுகின்றன.
இதற்குப் பதில் இனிமேல் குறைந்தபட்சம் 1000 படிகள் வாங்கப்படும் என்றுஅறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின்படி, நூலக ஆணைக்குழுவின் நிதி நிலைக் கேற்ப, வாசகர்களின்பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பொது நூலகங்களுக்கு வாங்கப்படும்நூல்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் ஆயிரம் பிரதிகள் என்று உயர்த்திமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
3ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications