என்எல்சி-பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் கடிதம்இது ஒரு கபட நாடகம்-ஜெயலலிதா தாக்கு
சென்னை:
என்.எல்.சி. ஊழியர்களின் போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவித்ததால்ஆத்திரமடைந்து தான், 10 சதவீத பங்குகளையும் ஊழியர்களுக்கே தர வேண்டும்என்று முதல்வர் கருணாநிதி கபட நாடகம் போட்டுள்ளார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி மின் கழக நிறுவனஊழியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டத்தை நான் தொடங்கி வைக்க வேண்டும் என்று நேரில் வந்து அழைப்புவிடுத்தனர்.நானும் அதில் கொள்ள ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால், நான் உண்ணாவிரதப்போராட்டத்தைத் தொடங்கி வைத்தால், அதைக் காரணம் காட்டி அரசியல் சாயம் பூசி,திமுக தொழிற்சங்கத்தை போராட்டத்திலிருந்து விலக வைக்க கருணாநிதி திட்டம்தீட்டியிருந்தார்.
இதன் மூலம் தொழிலாளர்களின் போராட்டம் நசுக்கப்பட்டு விடும் என்றகாரணத்தால்தான் நான் உண்ணாவிரதத்தைத் தொடங்கப் போகவில்லை.
நான் இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதை விரும்பாத கருணாநிதி,கோபமடைந்துதான், 10 சதவீத பங்குகளையும் தொழிலாளர்களுக்கே விற்கவேண்டும் என்று மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தினார்.
ஆனால் கருணாநிதியின் இந்த கபட நாடகத்தை தொழிலாளர்கள் புரிந்து கொண்டுபிரதமரின் யோசனையை நிராகரித்து விட்டனர். கருணாநிதி செய்யும் சூழச்சிக்குஇறையாகி விடாமல், அனைத்துத் தொழிலாளர்களும் ஒற்றுமையோடு இணைந்துஇறுதி வரை போராடி வெற்றி பெற வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
சிதம்பரத்துடன் கருணாநிதி பேச்சு:
இதற்கிடையே என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசுஉடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, பிரதமர்மன்மோகன் சிங்குக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், என்.எல்.சி.விவகாரத்தின் அவசரம் கருதி நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்பு கொண்டுநிலைமையை பிரதமருக்குத் தெரிவிக்குமாறு வலியுறுத்தினேன். அவரும் உடனடியாகபிரதமரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.
பங்கு விலக்கல் தொடர்பாக எனது முந்தையை கோரிக்கையை உடனடியாக ஏற்றபிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், தொழிலாளர்களுக்கும்பங்கு ஒதுக்குவது குறித்த அறிவிப்பானது அவர்களது கோரிக்கையை முழுமையாகநிறைவு செய்வது ஆகாது.
நாளுக்கு நாள் தொழிலாளர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தீய சக்திகள்சில வன்முறையைத் தூண்டி விட திட்டமிட்டுள்ளன. இதனால் சட்டம் ஒழுங்குப்பிரச்சினை ஏற்படும். மேலும் இந்த நிலை நீடித்தால் அது தமிழகத்திற்கு மட்டுமல்லாதுதென்னிந்தியாவுக்கே மின் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாக்கும்.
எனவே பங்கு விலக்கல் முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
பிரதமருக்கு தான் அனுப்பிய பேக்ஸ் கடிதத்தின் நகலை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் அனுப்பி வைத்துள்ளதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications