புதுவை உள்ளாட்சி தேர்தல்: காங்-திமுக வெற்றிகாரைக்காலில் தேமுதிக வெற்றி,அதிமுக தோல்வி
பாண்டிச்சேரி:
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றிகிடைத்துள்ளது. அதிமுக இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது.
திமுக-காங்கிரஸ் கூட்டணி 4 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது.காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் தேமுதிகவின் பிரபாவதி வெற்றிபெற்றுள்ளார்.பாண்டிச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல்நடந்துள்ளது.
இதில் புதுவை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர்டாக்டர் ஸ்ரீதேவி வெற்றி பெற்றார்.
ஏனாம் நகராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் ஷகீலா தேர்வுசெய்யப்பட்டார். மாஹே நகராட்சித் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பரம்பத் வெற்றி பெற்றார். உழவர் கரையில், காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபால்வெற்றி பெற்றார்.
காரைக்கால் நகராட்சித் தலைவர் பதவியை தேமுதிக வேட்பாளர் பிரபாவதிகைப்பற்றியுள்ளார். இவர் முன்பு காங்கிரஸில் டிக்கெட் கேட்டிருந்தார். அதுகிடைக்காததால் விஜயகாந்த் கட்சியில் வந்து சேர்ந்தார். தற்போது தலைவர் தேர்தலில்வெற்றி பெற்றுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தேமுதிக, முக்கியமானகாரைக்கால் நகராட்சியை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்காரைக்காலில் வார்டு கவுன்சிலர் தேர்தலில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ்,திமுகவே வெற்றி பெற்றுள்ளன.
அதே போல புதுவை நகராட்சி வார்டு தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக நான்குவார்டுகளையும், அதிமுக மற்றும் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலா 1 இடத்திலும்வெற்றி பெற்றுள்ளன.
உழவர்கரை நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் திமுக இரண்டிலும், காங்கிரஸ் மற்றும்சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். இந்த நகராட்சியின்நான்கு வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் அதிமுக மற்றும் கண்ணனின் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் கட்சிகளுக்குபெரும் தோல்வி கிடைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications