புதுவை வெற்றி: விஜயகாந்த் குஷியோ குஷி!
சென்னை :
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிட்டு காரைக்கால்நகராட்சியை தேமுதிக கைப்பற்றியுள்ளது, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகபெறப் போகும் மிகப் பெரிய வெற்றிக்கு முன்னோடி என்று நடிகரும் கட்சித்தலைவருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.
காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் விஜயகாந்த் கட்சியைச் சேர்ந்த பிரபாவதிகிட்டத்தட்ட 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில்அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட் இழந்துள்ளது.புதுவை யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் முக்கியமான நகராட்சி ஆகும். இந்தநகராட்சியை விஜயகாந்த் கட்சி கைப்பற்றியிருப்பது மிகப் பெரிய சாதனையாகக்கருதப்படுகிறது.
இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசியல் கட்சியைத் தொடங்கி 8வது மாதத்திலேயே தமிழக பொதுத் தேர்தலைசந்தித்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 28 லட்சம் வாக்குகளையும்பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்று தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாகதிகழ்கிறது தேமுதிக.
அதேபோல 2006ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த புதுவை உள்ளாட்சித் தேர்தலிலும்காரைக்கால் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு நகராட்சித் தலைவர் பதவியைகைப்பற்றியுள்ளது. இது தேமுதிக அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனை.
காரைக்காலில் கிடைத்த வெற்றி தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித்தேர்தல் வெற்றிக்கு முன்னோடி என்றால் அது மிகையாகாது என்று கூறியுள்ளார்விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications