குடும்ப பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்துசெல்போனில் மிரட்டிய இளைஞர் கைது
சென்னை:
ஹோட்டலில் தன்னுடன் சந்தோஷமாக இருக்காவிட்டால், ஆபாசப் படங்களைஇன்டர்நெட்டில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி தனியாகஇருந்த பெண்ணுக்கு தொடர்ந்து செல்போன் மூலம் தொல்லை கொடுத்த நபரைபோலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் மும்தாஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரதுகணவர் முகம்மது. தொழிலதிபரான கம்மது கடந்த 28ம் தேதி பிசினஸ் தொடர்பாகவெளியூர் சென்றிருந்தார்.
அதன் பின்னர் மும்தாஜின் செல்போனில் ஒருவர் பேசினார். அந்த நபர் மும்தாஜிடம்,வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி கேட்டுள்ளார். அப்படி யாரும் இல்லைஎன்று மும்தாஜ் கூறவே, அந்த நபர் மும்தாஜைப் பற்றி கேட்க ஆரம்பித்துள்ளார்.
இதையடுத்து ராங் நம்பர் என்று கூறி விட்டு மும்தாஜ் போனை வைத்து விட்டார்.ஆனால் அந்த நபர் தொடர்ந்து விடாமல் மும்தாஜை தொடர்பு கொண்டார். அந்தஎண்ணில் தொடர்ந்து போன் வந்ததால் மும்தாஜ் செல்லை எடுக்கவில்லை.
![]() |
| கைது செய்யப்பட்ட ஜிதேந்தர் |
இதையடுத்து கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட ஆபாச எஸ்.எம்.எஸ்களை அந்த நபர்அனுப்பினார்.
அடுத்த நாள் நள்ளிரவிலும் மும்தாஜுக்கு போன் வந்தது. போனை எடுத்து மும்தாஜ்பேசியுள்ளார். அப்போது அந்த நபர், நான் ஹோட்டலில் ரூம் போட்டுள்ளேன். நீஎன்னுடன் தங்கி சந்தோஷத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உனது ஆபாசப்படங்கள் என்னிடம் உள்ளது.
அதை இன்டர்நெட்டில் வெளியிடுவேன். உனது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துஉன்னை அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டதும் பயந்து போன மும்தாஜ் போனைக் கட் செய்துள்ளார். இருப்பினும்தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ்களை அந்த நபர் அனுப்பியபடி இருந்தார்.
அடுத்த நாள் காலை முகம்மது ஊரிலிருந்து வீடு திரும்பினார். அப்போது செல்போன்மூலம் தான் பட்ட அவஸ்தையை கூறினார் மும்தாஜ். இதையடுத்து முகம்மது வடசென்னை இணை ஆணையர் ரவியை சந்தித்து விஷயத்தைக் கூறி புகார் கொடுத்தார்.
புகாரைப் பெற்ற ரவி, உதவி ஆணையர் நாகராஜன் தலைமையில் விசாரணைப்படையை அமைத்தார்.
முதலில் செல்போன் அழைப்பு எந்த எண்ணிலிருந்து வந்தது என்பதை போலீஸார்கண்டுபிடித்தனர். நுங்கம்பாக்கததில் ஒரு கடையில் போலியான முகவரி கொடுத்துஅந்த சிம் கார்டு வாங்கப்பட்டது தெரிய வந்தது.
கடந்த ஒரு மாதத்தில் அந்த செல்போனிலிருந்து யார் யாருக்கு போன் பண்ணப்பட்டதுஎன்பதை ஆராய்ந்த போலீஸார் அதை வைத்து குற்றவாளியை கண்டுபிடித்தனர்.
போலீஸாரின் துரித நடவடிக்கை காரணமாக ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த ஜித்துஎன்ற ஜிதேந்தர் பிடிபட்டார். அவர்தான் மும்தாஜை செல்போன் மூலம் டார்ச்சர்கொடுத்த நபர்.
மார்வாடியான ஜிதேந்தர் ராயல், கிங் என்ற பெயரில் அப்பகுதியில் மூன்றுஎலக்டிரிகல்ஸ் கடைகளை நடத்தி வருகிறார். அவரைக் கைது செய்த போலீஸார்அவரிடமிருந்து செல்போனைப் பறிமுதல் செய்தனர்.
அதில் ஏராளமான ஆபாச எஸ்.எம்.எஸ்.கள், படங்கள் இருந்தன. பின்னர் அவரைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது தெரிய வந்த விவரம்:
ஜித்தேந்தர் தனது செல்போன் மூலம் ஏதாவது ஒரு எண்ணைத் தொடர்புகொள்வாராம். மறுமுனையில் ஆண்கள் பேசினால் போனைக் கட் செய்து விடுவார்.பெண்கள் பேசினால் அவர்களிடம் பேசி அவர்கள் யார் என்பதை நைசாக அறிந்துகொள்வாராம். பின்னர் ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்புவாராம். அதற்கு அவர்கள்எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் பேசி தனது வழிக்குக்கொண்டு வருவாராம்.
அவரது செல்போனிலிருந்து குறிப்பிட்ட 10 எண்களுக்கு மட்டும் அவர் அதிகஅளவில் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது. அதில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தஒரு பெண்ணுக்கும் ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளார். அதற்கு அவர் பதில்தரவில்லை. அதேசமயம் புகாரும் கொடுக்காமல் விட்டு விட்டார். இப்போது மும்தாஜ்விவகாரத்தில் சிக்கிக் கொண்டு விட்டார் ஜிதேந்தர்.













Click it and Unblock the Notifications