ரூ. 1 கோடி கேட்டு மிரட்டல்: பைனான்சியர் போத்ரா கைது
சென்னை:
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தும் பிரபல திரைப்படபைனான்சியர் குல் சந்த் போத்ரா ரூ. 1 கோடி கேட்டு மிரட்டியதாக கைதுசெய்யப்பட்டார்.
சென்னை செளகார்பேட்டையைச் சேர்ந்தவர் போத்ரா. திரைப்படங்களுக்குபைனான்ஸ் செய்கிறார். முன்பு நடிகை ரோஜா, பணம் வாங்கிக் கொண்டு அதைத்திருப்பித் தராமல் போலி செக் கொடுத்ததாக கூறி ரோஜா மீது வழக்குப்போட்டுபரபரப்பை ஏற்படுத்தினார் போத்ரா.சமீபத்தில், காங்கிரஸ் எம்.பி. அன்பரசும், அவரது மகன் அருள் அன்பரசுவும்தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டுத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக கூறி வழக்குதொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அன்பரசுவின் நண்பர் மணி என்பவர் கொடுத்த புகாரின் பேரில்போத்ராவை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விருகம்பாக்கம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் மணி.
இவர் பாரினை பகுதியில் கோதுமை மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.அன்பரசு நடத்தி வரும் கல்வி அறக்கட்டளையில் ஒரு அறங்காவலராகவும் உள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் அன்பரசுவுடன் சேர்ந்து ஒரு கல்லூரி கட்ட திடடமிட்டிருந்தார்.இதற்காக போத்ராவிடம் ரூ. 21 லடசம் கடன் வாங்கினார். வாங்கிய கடனுக்காக 24வெற்று காசோலைகளையும், உறுதிமொழிப்பத்திரத்தையும் கொடுத்திருந்தார்.
கடன் தொகையை முழுவதுமாக திருப்பித் தந்த பிறகு இவற்றை திருப்பித் தருவதாகபோத்ரா கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 21ம்தேதி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா ஒரு வழக்கு தொடர்ந்தார்.
மணி கொடுத்திருந்த காசோலைகளில் இரண்டை அவரே ரூ. 6.50 லட்சம் பணத்தைவழங்குவதாக எழுதிக் கொண்டு மணி மோசடி செய்து விட்டதாக வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், வழக்கை வாபஸ் பெற வேண்டுமானால் தனக்கு ரூ. 1 கோடி தரவேண்டும் என்று மணியிடம் போத்ரா கூறியுள்ளார். ஆனால் இதை மணி நிராகரித்துவிட்டார்.
இதையடுத்து மணியை போத்ரா மிரட்டத் தொடங்கியுள்ளார்.
இதையடுத்து மணி சென்னை குற்றப் பிரிவு போலீஸில் புகார் கொடுத்தார். அந்தப்புகாரைப் பதிவு செய்து போலீஸார் போத்ராவிடம் விசாரணை நடத்தினர்.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான உதவி ஆணையர் வெள்ளத்துரைதான் போத்ராவைவிசாரித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று போத்ராவைக் கைது செய்தனர்.
மோசடி, நம்பிக்க்ை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் போத்ரா மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications