பழனிமாணிக்கம், வேங்கடபதிக்கு கல்தா?
சென்னை:
திமுகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்கள் பழனிமாணிக்கம் மற்றும்வேங்கடபதி ஆகியோரின் பதவி பறிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்குப் பதில் கே.பி.கே.குமரன், கிருஷ்ணசாமி ஆகிய திமுக எம்.பிக்கள்அமைச்சர்களாக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் பங்கேற்று அமைச்சர் பதவியைப் பெற்றுவரும் திமுகவுக்கு இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில் மொத்தம் 7 அமைச்சர்கள் உள்ளனர்.
இவர்களில் 3 பேர் கேபினட் அமைச்சர்கள். 4 பேர் இணை அமைச்சர்கள்.டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்கள்.
சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் உள்ளிட்ட 4 பேர் இணைஅமைச்சர்கள் ஆவர்.
இவர்களில் இருவரை நீக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. சட்டத்துறை இணைஅணைச்சர் வேங்கடபதி, நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம்ஆகியோர்தான் கல்தா கொடுக்கப்படவுள்ள அமைச்சர்கள்.
இருவரது செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தியாகஇருப்பதாக கூறப்படுகிறது. மேலும், திமுக மேலிடம் இவர்கள் குறித்துஅதிருப்தியுடன்தான் உள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மீது பழனிமாணிக்கம் கடுமையான அணுகுமுறையைக்கடைப்பிடிக்கவில்லை என்று திமுக மேலிடம் கருதுகிறது.
குறிப்பாக சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான மிடாஸ், மதுபானத்தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை நடந்த விஷயத்தில், சசிகலாவுக்குஎதிரான வலுவான ஆதாரங்களைத் திரட்ட வருமான வரித்துறை தவறி விட்டதாகவும்,இதற்கு பழனிமாணிக்கத்தின் அணுகுமுறையே காரணம் எனவும் திமுக கருதுகிறது.இதனால் அவரைத் தூக்க முடிவு செய்துள்ளனர்.
இதேபோல வேங்கடபதியின் செயல்பாடுகளில் யாருக்குமே திருப்தி இல்லை என்றுகூறப்படுவதால் அவரையும் நீக்க முடிவு செய்யப்பட்டள்ளதாக தெரிகிறது.
இவர்களுக்குப் பதில் திமுக சார்பில் சமீபத்தில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டகே.பி.கே.குமரன் மற்றும் செ.குப்புசாமி அல்லது ஸ்ரீபெரும்புதூர் கிருஷ்ணசாமிஆகியோரில் ஒருவர் அமைச்சராககப்படக் கூடும் எனத் தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் நாடார் சதாயத்தைச் சேர்ந்த யாரும் அமைச்சராக இல்லைஎன்ற குறை அச்சமுதாயத்தினர் மத்தியில் உள்ளது. இதையும் ஒரு காரணமாகக்கூறித்தான் சரத்குமார் திமுகவிலிருந்து விலகினார்.
நாடார் சமுதாயத்தினர் மத்தியில் நிலவும் அதிருப்தியைப் போக்கவும், தினகரன்நாளிதழை சன் டிவி குழுமம் வாங்கியதால் அச்சமுதாயத்தினர் மத்தியில் நிலவும்ஏமாற்றத்தையும் அகற்றும் பொருட்டு, கே.பி.கே.குமரனை மத்திய அமைச்சராக்கதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை திருத்தி அமைக்கப்படும்போது இந்த அமைச்சர்கள் நியமனம்மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications