கடந்தது 48 மணி நேரம் - தவிக்கும் பிரின்ஸ்;மீட்பு படை வீரர்கள் நெருங்குகின்றனர்!
ஷாகாபாத் (அரியானா):
60 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் பிரின்ஸை மீட்கும் முயற்சியில் ராணுவம் தீவிரமாகஉள்ளது. பள்ளம் தோண்டப்பட்டு இணைப்புப் பள்ளத்தின் வழியே மீட்புப் படையினர் மிக மிக மெதுவாகபிரின்ஸை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
![]() |
இதையடுத்து கிராமமே பதறிப் போனது. போலீஸாருக்கும், தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தரப்பட்டுஅனைவரும் விரைந்து வந்தனர். சிறுவனை எப்படி மீட்பது என்ற திட்டத்தை தீயணைப்புப் படையினர்வகுத்தனர். முதல் கட்டாக கிணற்றுக்குள் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. சிறுவன் மயக்கமடைந்து விடக் கூடாதுஎன்பதற்காக ஆக்சிஜன அனுப்பப்பட்டது.
சிறுவனை கயிறு கட்டி மேலே தூக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது பலன் தராது என்பதால் அதைக் கைவிட்டதீயணைப்புப் படையினர் வேறு மார்க்கமாக சிறுவனை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களது முயற்சிகள்தோல்வியில் முடிந்தன.
![]() |
சிறுவனை மீட்க அவர்கள் துரித கதியில் நடவடிக்கையில் இறங்கினர். சிறுவன் விழுந்துள்ள கிணற்றுக்கு அருகேபெரிய குழியைத் தோண்டி அதன் வழியே பிரின்ஸை மீட்க திட்டமிடப்பட்டது. அந்தப் பணியை தொடங்கியராணுவ வீரர்கள், இன்னொரு புறம், குழிக்குள் சிறுவனின் நிலையை அறிவதற்காக அதி நவீன கேமராவைஉள்ளே அனுப்பினர்.
அந்த கேமராவை தொலைக்காட்சி ஒன்றுடன் இணைத்தனர். இதன் மூலம் குழிக்குள் உள்ள சிறுவன் நலடன்இருப்பது தெரிய வந்தது. தைரியமாக இருக்குமாறும், பயப்படாமல் இருக்குமாறும் சிறுவனுக்கு மேலிருந்துதகவல் கொடுத்த ராணுவத்தினர், சிறுவனுக்கு பிஸ்கட் மற்றும் டீயை கயிற்றின் மூலம் உள்ளே அனுப்பினர்.அதைப் பெற்றுக் கொண்ட பிரின்ஸ் அவற்றை சாப்பிட்டான்.
மருத்துவக் குழு ஒன்றும் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளது. அவர்கள் அவ்வப்போது சிறுவனின் உடல் நலத்தைமேலிருந்தபடியே கண்காணித்து வருகின்றனர். தங்கு தடையின்றி ஆக்சிஜனும் உள்ளே அனுப்பப்பட்டு வருகிறது.சிறுவன் கத்தைப் பார்க்கும்போது அவன் பயமின்றி, தைரியமாக இருப்பது தெரிய வந்துள்ளதால், ராணுவம்நம்பிக்கையுடன் மீட்பு நடவடிக்கைகளில் இறங்கியது.
![]() |
மீறித் தோண்டினால் மண் சரிவு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதால் என்ன செய்வது என்ற ராணுவ வீரர்கள்குழப்படைந்துள்ளனர். வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து ராணுவ வீரர்களும், மும்பையிலிருந்துவந்துள்ளது மீட்புப் படையினரும் ஆலோசித்து வருகின்றனர்.
மீட்புப் பணிகள் நடந்து வரும் இடத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கவலை: சிறுவன் பிரின்ஸ் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்று பிரார்த்திப்பதாக பிரதமர்மன்மோகன் சிங் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுவன் பிரின்ஸ்விரைவில் மீட்கப்பட வேண்டும். இதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்.
அவன் மீட்கப்பட்ட பின்னர் மருத்துவனையில் சேர்த்து சிறப்பான சிகிச்சைகள் கொடுக்க உத்தரவிட்டுள்ளேன்.அதற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.
சிறுவன் பிரின்ஸ் நலமாக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். அவனது நிலை மோசமடைந்து வருவதாக கூறமுடியாது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவன் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்றுபிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் சிங்.
48 மணி நேரமாக ஆழ் துளைக் கிணற்றுக்குள் இருக்கும் சிறுவன் பிரின்ஸ் மீட்கப்படுவதை அறிந்து கொள்ளநாடே பெரும் எதிர்பார்ப்பிலும், கவலையிலும் மூழ்கியுள்ளது. அவனுடன் தந்தை ராம்சந்தர் மைக் மூலம்அவ்வப்போது பேசி வருகிறார். பிரின்ஸும் தனது தந்தையிடம் அழுதபடி பேசிக் கொண்டிருக்கிறான்.
மிகுந்த மன தைரியத்துடன் பிரின்ஸ் பத்திரமாக இருந்தாலும் கூட அவனை உடனடியாக மீட்பதே நல்லது என்றுடாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ஆழ் துளைக் கிணற்றுக்கு அருகே பள்ளம் தோண்டும் பணியும்,அதிலிருந்து ஆழ் துளைக் கிணற்றுக்கு பள்ளம் தோண்டும் பணியும் முடிவடைந்தது.
இதையடுத்து இணைப்புப் பள்ளத்தின் வழியே மீட்புப் படை வீரர்கள் படு நிதானமாக செல்லத்தொடங்கியுள்ளனர். மண் சரிவு ஏற்பட்டு விடாமல் தவிர்ப்பதற்காக வீரர்கள் மிக மிக மெதுவாக செல்வதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் பிரின்ஸை நெருங்கி விட்டதால் அவன் எப்படியும் மீட்கப்பட்டு விடுவான் என்ற நம்பிக்கைபிறந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?















Click it and Unblock the Notifications