கருணாநிதி பதில் சொல்லியே ஆக வேண்டும்-ஜெ
சென்னை:
தனது சொந்த பந்தங்களின் சொத்து விவரம் குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி பதில் சொல்லியேஆக வேண்டும். அதுவரை நான் விட மாட்டேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தனது சொத்து கணக்கு வேட்பு மனுவோடு சேர்த்த தாக்கல்செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி. அதேபோல தனது மகன் அழகிரியும், மருமகன்செல்வம் முறையாக வரி கட்டுவதாகவம் தெரிவித்துள்ளார்.1964ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நான் வருமான வரி கட்டி வருகிறேன். இந்திய அரசாங்கத்திற்கு நான்கோடிக்கணக்கான ரூபாய்களை வரியாக செலுத்தியுள்ளேன். இன்னும் செலுத்தி வருகிறேன்.
நான் கேட்பது அவரது குடும்பத்தினர் அனைவரின் சொத்துக்க் கணக்கைத்தான். அவர்களின் அசையும்,அசையாச் சொத்துக்களின் முழு விவரம், வங்கி வைப்பீடுகள், பங்கு முதலீடுகள் முதலிய விவரங்களைமறைக்காமல் சொல்ல முடியுமா? என்பதுதான் எனது நேரடி கேள்வி.
இதுபற்றி நேருக்கு நேர் கேள்வி கேட்க என் சார்பில் குழுவை நியமிக்கிறேன். பகிரங்கமாக பத்திரிக்கையாளர்கள்முன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல கருணாநிதி தயாரா? எந்த தேதி வசப்படும் என்றுசொல்லுங்கள். அதனை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நான் ஏற்பாடு செய்கிறேன்.
இதுவரை கருணாநிதி என் மீது போட்ட 12 வழக்குகளில் நான் வெற்றி பெற்றுள்ளேன். எதிரிகள் மீது ஏராளமானபொய் வழக்குகளை போட மட்டுமே இவருக்குத் தெரியும்.
கருணாநிதி தனது குடும்பத்தினரின் சொத்துக் கணக்கை தெரிவிக்கும் வரையில் நான் விடப் போவதில்லை என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications