வருமான வரிவழக்கு: ஜெ-சசி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை:
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அவரது உயிர்த் தோழிசசிகலாவும் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்யவில்லை.அதே போல ஜெயலலிதாவும் சசிகலாவும் பார்ட்னர்களாக உள்ள சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் 1991-92மற்றும் 92-93ம் ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை.இது தொடர்பாக இருவரும் மீதும் வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது. ஆனால், இந்த வழக்கில் இருந்துவிடுவிக்கக் கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந் நிலையில் இந்த மனு இன்று பொருளாதாரக் குற்றங்களுக்கான முதன்மை கூடுதல் தலைமைமெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருவர் மீதும்குற்றச்சாட்டுகளை பதிவு செய்யுமாறு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜ், வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ஜெயலலிதாவும் சசிகலாவும்நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications