அங்கீகாரம் பெறாத மனைகள்-ஸ்டாலின் சலுகை
சென்னை:
அங்கீகாரம் பெறாத மனைகளுக்குப் பட்டா பெற புதிய சலுகையை சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் 110வது விதியின் கீழ் சட்டசபையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது,தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் அனுமதி இன்றி அமைக்கப்பட்ட மனைப் பிரிவுகளில், மனைகளை வாங்கிவீடுகள் கட்டியுள்ள பெருவாரியான பொதுமக்களிடமிருந்தும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்தும்,இம்மனைகளை வரைமுறைப் படுத்துவதற்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது.
நான் பல்வேறு மாவட்டங்களுக்கு வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்ய சென்ற போதும் இக்கோரிக்கை மக்கள்பிரதிநிதிகளாலும், மக்களாலும் வலியுறுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள நகர்புறங்களில் சுமார் 2600மனைப்பிரிவுகள் அங்கீகரிக்கப்படாத நிலையில் உள்ளன.
இதனால் ஏறக்குறைய சுமார் 90,000 மனைகள் அங்கீகரிக்கப்படாமல் உள்ளன. தொடர்பான செய்திகள்பு நான்கு முறைஅரசால் இந்த அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுஅரசாணைகளும் 1999, 2000, 2001 மற்றும் 2006ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.
கடந்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் படி, அபி விருத்திக்கட்டணம், திறந்த வெளிக்கட்டணம்மற்றும் வரன்முறைக் கட்டணம் என்று மூன்று வித கட்டணங்களை மனைகளுக்கு சொந்தக்காரர்கள் செலுத்தவேண்டியிருந்தது.
மேலும் திறந்த வெளிக்கட்டணம், இன்றைய வழிகாட்டி நல மதிப்பீட்டின் அடிப்படையிலும், அபிவிருத்திக்கட்டணம் இன்றைய கட்டுமான விலை நிலவரப்படியும் செலுத்த வேண்டியிருந்ததால், கூடுதலான தொகையைமக்கள் செலுத்த வேண்டியிருந்தது.
எனவே இந்தத் திட்டங்கள் யாவும் எதிர்பார்த்த அளவுக்குப் பயனளிக்கவில்லை. இதுவரை இத்திட்டங்களின் கீழ்5 விழுக்காடு மனைகள் மட்டுமே வரைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
இது தவிர அங்கீகரிக்கப் படாத மனைப்பிரிவுகளில் வாழ்ந்து வருவோர்க்கு, உள்ளாட்சி அமைப்புகள் தங்களின்பொது நிதியிலிருந்து லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்கின்றன. இதனால் உள்ளாட்சி அமைப்புகளின்செலவினங்கள் அதிகரிக்கின்றன.
அங்கீகாரம் பெறப்படாத மனைப்பிரிவுகளில் உள்ள மனைகள் விலை குறைவாக கிடைக்கிறது என்பதால்பெரும்பாலும் ஏழை, எளிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இவற்றை வாங்கியுள்ளனர். அங்கீகாரம் இல்லாதமனைப்பிரிவுகள் என்பதால் அவற்றுக்கு கட்டிட வரைபட அனுமதி பெறமுடியாது.
கட்டிடம் கட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெறமுடியாது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சிமன்றங்களும் குடிநீர், சாலைகள், தெருவிளக்கு, வடிகால் போன்ற அடிப்படை வசதிகளையும் இப்பகுதிகளுக்குசெய்து தர இயலாத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
விதிகளின் படி அங்கீகாரம் பெறாதமனைப் பிரிவுகளுக்கு பரிவுகாட்டுதல், இது போன்ற தவறுகளைஊக்குவிப்பதாக அமைந்துவிடும் என்ற கருத்து ஒரு புறம் இருப்பினும், இப்பகுதிகளில் வாழ்ந்து வருவோருக்குஅடிப்படை கட்டமைப்பு வசதிகளான குடிநீர், சாலை தெருவிளக்கு மற்றும் சாக்கடை வசதிகள் போன்றவற்றைஒரு பொறுப்புள்ள அரசு வெகுகாலம் செய்து தராமல் இருக்கவும் முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே உள்ளாட்சி அமைப்புகளுக்கு வர வேண்டிய வருமானத்தைக் கருத்தில் கொண்டும், ஏழை, எளியமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்ற இந்த அரசின் குறிக்கோளையும் கருத்தில்கொண்டு இந்த பிரச்சனைக்கு இம்முறை நிரந்தர தீர்வு காண எளிமைப்படுத்தப்பட்ட திட்டம் ஒன்றிற்கு 20.7.2006அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி திறந்த வெளி கட்டணம், அபிவிருத்திக் கட்டணம் மற்றும் முறைப்படுத்துதல் கட்டணம் ஆகிய மூன்றுவகையான கட்டணங்களை வசூலிப்பதற்க்கு பதிலாக பினவருமாறு ஒரே ஒரு கட்டணத்தை மட்டுமே வசூலித்துக்கொண்டு 1.1.1980க்குப் பிறகு அங்கீகரிக்கப்படாது உள்ள மனைப்பிரிவுகளை முறைப் படுத்தலாம் என இவ்வரசுமுடிவு செய்துள்ளது.
மாநகராட்சி பகுதிகள் (சென்னை பெருநகர் வளர்ச்சிப் பகுதி நீங்கலாக) ஒரு சதுர அடிக்கு ரூ.5.
நகராட்சிப் பகுதிகள் ஒரு சதுர அடிக்கு ரூ.2
பேரூராட்சி பகுதிகள் ஒரு சதுர அடிக்கு ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படும்.
அத்துடன் 1.1.1980க்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகள் அனைத்தும் ஓரு சதுரஅடிக்கு ரூ.1 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலித்த பின்னர் முறைப்படுத்தப்படும். ஏனைய அடிப்படைநிபந்தனைகள் தொடரும்.
இத்திட்டம் 31.12.2006 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்பதுடன் இத்திட்டம் மனைப்பிரிவுஅபிவிருத்தியாளர்கள் விற்காமல் வைத்திருக்கும் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இந்த புதிய திட்டத்தில் கீழ் கட்டணம் செலுத்தி வரன்முறைப்படுத்தப் பட்டவுடன் ஒப்புதல் பெறப்படாத கட்டிடவரை படங்களுக்கு விதிகளின் படி ஏற்பளிப்பு வழங்கப்படும். மேலும் குடிநீர் வசதி சாலைகள், தெருவிளக்குமற்றும் சாக்கடை வசதி போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை உடனடியாக செய்துதரநகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்கும்.
இதற்கான விரிவான அரசாணை தனியே வெளியிடப்படுகிறது என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications