தமிழகத்தை 39 மாவட்டங்களாக பிரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டம் என்றுமொத்தம் 39 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,அரியலூர் மீண்டும் தனி மாவட்டமாக்கபபடும் என முதல்வர் அறிவித்துள்ளதைவரவேற்கிறேன். அதேபோல மேலும் சில பெரிய மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தைப் பிரித்து திண்டிவனத்தை (ராமதாஸின் சொந்த ஊர்இதுதான்) தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம் அமைக்க வேண்டும்.அதேபோல திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டம், மேட்டூரை(இது பாமக தலைவர் ஜி.கே.மணியின் சொந்த ஊர்) தலைமையிடமாகக் கொண்டுஒரு புது மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
வேலூர், ஈரோடு ஆகியமாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும்.தமிழகத்தில் தற்போது 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொருதொகுதிக்கும் ஒரு மாவட்டம் என மொத்தம் 39 மாவட்டங்களைஉருவாக்கவேண்டும்.
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டினால், கேளிக்கை வரி ரத்து என்றுஅறிவித்துள்ளது நியாயம் அல்ல. அதற்குப் பதிலாக, படம் முழுவதும் வரும்வசனங்களும் பிற மொழிக் கலப்பில்லாமல் தூய தமிழில் இருந்தால்தான் வரி ரத்துஎன்று மாற்றி அறிவிக்க வேண்டும்.
விசாரணைக்கு ஜெ ஒத்துழைக்க வேண்டும்:
சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நிலத்தில், ஜெயலலிதா பங்களா கட்டியதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்று எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
விசாரணை 2 மாதம் முழுமையாக நடக்க, நீதிமன்றத்துக்கு சென்று இழுத்தடிக்காமல்,ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். முன்பு செய்த வம்புகளைஎல்லாம் செய்யக்கூடாது.
ஆரம்பக் கல்விக்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். அனைவருக்கும் ஒரேமாதிரியான கல்வி அளிக்க வேண்டும். அப்போதுதான் ஐஐடி, ஐஐஎம் போன்றஉயர்கல்வி நிறுவனங்களில் கிராமப் பகுதி மாணவர்களும் படிக்க முடியும்.
தனியார் பள்ளிகளில் சுற்றுப் பகுதியில் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடுவழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். தமிழகத்தில் வன்முறைஎந்த ரூபத்திலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மாவட்டந்தோறும்சிறுப்பு குழு அமைக்க வேண்டும். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை குறுகியகாலத்தில் நிறைவேற்றிய பெருமை முதல்வரரையே சேரும்.
லெபனான் மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் இலங்கையில் தமிழர்கள் மீதானதாக்குதலுக்கு முக்கியத்துவம் அளிக்க மறுக்கிறன்றனர். இலங்கை அதிபர் ராஜபக்சேஅரசியலில் தான் ஒரு மிகப்பெரிய நடிகன் என்பதை நிரூபித்துள்ளார். அவரதுநடிப்பில் இந்தியா ஏமாந்து விடக்கூடாது.
லாட்டரிச் சீட்டை மீண்டும் கொண்டு வரவே கூடாது. அதற்குப் பதில் அத்தொழில்இருந்தவர்களுக்கு வேறு தொழிலை ஏற்பாடு செய்து தரலாம்.
பொது இடங்களில் எழுதப்படும் விளம்பரங்கள், தலைவர்களின் படங்கள் நீண்டகாலமாக அப்படியே அழிக்கப்படாமல் இருந்து வருகின்றன. இவற்றைஒழிக்ககடுமையான நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.
அரசு மற்றும் பொது இடங்களில் அதிகபட்சம் 5 நாட்கள் வரை மட்டுமேவிளம்பரங்கள், போஸ்டர்கள் இருக்கலாம். அதற்கும் கூட ஒரு வாடகையைநிர்ணயிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications