ஈரானுக்கு உதவி: 2 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

ஈரான் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவி செய்த 2 இந்திய நிறுவனங்களுக்குத் தடைவிதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு சமீபத்தில் அமெரிக்கநாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டசில மணி நேரங்களிலேயே இரண்டு இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதிக்கஅமெரிக்க அரசு முடிவு செய்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

ஈரானின் ஏவுகணைத் திட்டங்களுக்கு உதவியதாக கூறி இந்த நிறுவனங்கள் மீது தடைவிதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆட்டம் காட்டி வரும்ஹிஸ்புல்லா அமைப்பை தீவிரமாக ஆதரிக்கும் நாடு ஈரான்.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆயுத உதவிகளையும் அது செய்து வருவதாக அமெரிக்காகுற்றம்சாட்டி வருகிறது. மேலும் ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரித்துவருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந் நிலையில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு தனியார் நிறுவனங்கள், ஈரான்ஏவுகணைத் திட்டங்களுக்குத் தேவையான உதவிகளை செயதுள்ளதாக அமெரிக்கஅரசு கூறியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிகாரி ஒருவர், எந்த நிறுவனங்கள்இந்த உதவியைச் செய்தன என்ற விவரங்களை வெளியிட மறுத்து விட்டார்.

இந்திய நிறுவனங்கள் மீது என்ன மாதிரியான தடை விதிக்கப்படும் என்பதுகுறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. இருப்பினும், தொடர்பான செய்திகள்புதடை விதிக்கப்பட்டஇந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசின் காண்டிராக்டுகள், உதவிகள், ராணுவரீதியாலான வர்த்தகம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ம் ஆண்டு முதல் மொத்தம் ஏழு இந்திய நிறுவனங்கள் மீது எட்டுமுறைஅமெரிக்கா பொருளாதாத் தடையை விதித்தது. தற்போது மேலும் 2 நிறுவனங்கள் மீதுதடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவால் அதிகபட்சமாக சீன நிறுவனங்கள் மீது கடந்த 6 ஆண்டுகளில் 70முறை பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக இந்திய நிறுவனங்கள் மீதுவிதிக்கப்படவுள்ள தடை குறித்து அடுத்த வார தொடக்கத்தில் அமெரிக்க துணைஅமைச்சர் நிக்கோலஸ் பர்ன்ஸ் முடிவு செய்யவுள்ளார்.

இந்த முடிவு குறித்து முதலில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபைக்குத்தெரிவிக்கப்படும். அதன் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.

இந்த தீர்மானத்தை அமெரிக்க அரசு முன்பே காங்கிரஸுக்கு அனுப்பியிருக்கும்.ஆனால் இந்தத் தீர்மானத்தால் இந்திய-அமெரிக்க அணு சகதி ஒப்பந்தத்தைநிறைவேற்றுவதில் பின்னடைவு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவேபொருளாதாரத் தடை தீர்மானத்தை நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+