கர்நாடகத்தில் தமிழ்ப் பள்ளிகள் திடீர் மூடல்!
ஓசூர்:
கர்நாடக, தமிழக எல்லையில் உள்ள கர்நாடகப் பகுதிகளில் அம்மாநில அரசால்தொடங்கப்பட்ட 2 தமிழ் வழிக் கல்வி பள்ளிகள் திடீர் என மூடப்பட்டு விட்டன.இதனால் இப்பகுதி தமிழர்கள் தமிழ் வழியில் கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக, தமிழக எல்லையில் காவிரி ஆற்றையொட்டி ஆலம்பாடி, பாலாறு,ஜம்போத்பட்டி, சிங்கத்திரா காலனி, அப்புக்கான்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட 7கிராமங்கள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் 80 சதவீதம் பேர் தமிழர்கள். மற்றவர்கள்மலைவாழ் மக்கள் ஆவர்.இங்குள்ள தமிழர்கள் தமிழ் வழியில் கற்க முன்பு வசதியில்லாமல் இருந்து வந்தது.இவர்கள் தமிழ் வழியில் படிக்க வேண்டுமானால், காவிரி ஆற்றை பரிசல் மூலம்கடந்து தமிழகத்தில் உள்ள பெண்ணாகரம், நெருப்பூர், ஏரியூர் வந்துதான் படிக்கவேண்டும்.
காவிரி ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்தால் இவர்களால் வரமுடியாது. இதனால்தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தமிழ் வழியில் கற்க பள்ளிக்கூடம் திறக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து பாலாறு மற்றும் ஆலம்பாடி கிராமத்தில் இரண்டு தமிழ் வழிபள்ளிக்கூடங்களை கர்நாடக அரசு திறந்தது. கடந்த 2003ம் ஆண்டு வீரப்பன்வேட்டையில் ஈடுபட்டிருந்த கர்நாடக அதிரடிப் படையினர் தங்குவதற்காகஆலம்பாடி பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு மூடி விட்டது.
அந்த பள்ளிக் கூடம் அதிரடிப்படை முகாமாக மாற்றப்பட்டது. பாலாறு பள்ளிமட்டுமே இயங்கி வந்தது. வீரப்பன் கொல்லப்பட்ட பின்னர் இந்தப் பள்ளிக்கூடம்திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திறக்கப்படவில்லை.
மாறாக தற்போது பாலாறு பள்ளிக் கூடத்தையும் கர்நாடக அரசு மூடி விட்டது.இதனால் இங்கு வசிக்கும் தமிழர்களின் குழந்தைகள் பெரும் சிரமத்திற்குஆளாகியுள்ளனர். அவர்களது படிப்பு பாதியில் தடை படும் சூழ்நிலைஉருவாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications