மருத்துவமனையில் காஸ்ட்ரோ-எதிர்ப்பாளர்கள் உற்சாகம்-உன்னிப்பாய் கவனிக்கும் அமெரிக்கா
வாஷிங்டன்:
கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் உடல் நிலையை அமெரிக்க அரசு தீவிரமாககண்காணித்து வருகிறது.
அமெரிக்காவுக்கு அருகில் ஒரு குட்டித் தீவாய் இருக்கும் கியூபாவின் வலிமைவாய்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் காஸ்ட்ரோ. மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துவரும் ஒரே கம்யூனிஸ தலைவரும் காஸ்ட்ரோதான்.அமெரிக்காவை மிகத் தீவிரமாக எதிர்த்து, அமெரிக்காவின் கடுமையானநெருக்கடிகளை லாவகமாக சமாளித்து கியூபாவை நீண்ட காலமாக ஆண்டு வருகிறார்காஸ்ட்ரோ.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காஸ்ட்ரோவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.அவரது குடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அறுவைச்சிகிச்சை நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக தனது தம்பி ரால் காஸ்ட்ரோவிடம் தனது அதிபர்பொறுப்புகளையும், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பொறுப்பையும் பிடல்ஒப்படைத்துள்ளார்.
![]() |
| இளம் வயதில் போராளியாக பிடல் |
இதுதொடர்பாக பிடல் வெளியிட்ட அறிக்கை அந்நிாட்டு தொலைக்காட்சியில்வாசிக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த 47 ஆண்டு காலமாக பிடல் வசம் இருந்தகியூபாவின் ஆட்சிப் பொறுப்பும், கட்சி பொறுப்பும் முதல் முறையாக இன்னொருவர்கைக்கு மாறியுள்ளது.
ரால் காஸ்ட்ரோ கடந்த 40 ஆண்டு காலமாக கியூபாவின் பாதுகாப்பு அமைச்சராகஉள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கியூபாவில் நடந்துள்ள இந்த மாற்றத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்துவருகிறது.
இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்னோகூறுகையில், கியூபா படிப்படியாக ஜனநாயகப் பாதைக்கு மாறுவதற்கான முதல்கட்டமாக இதை அமெரிக்க அரசு கருதுகிறது.
பிடல் காஸ்ட்ரோ தனதுபொறுப்புகளை தம்பி ரால் காஸ்ட்ரோவிடம்ஒப்படைத்திருப்பதன் மூலம் கியூபாவில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படடிருப்பதாகக்கருத முடியாது.
![]() |
எனவே ரால் காஸ்ட்ரோவிடம் பேச்சு நடத்துவது என்ற முடிவுக்கு அமெரிக்காவரவில்லை.
பிடல் செய்ததைத் தான் ரால் காஸ்ட்ரோவும் செய்வார். பிடலைப் போலத்தான் ராலும்நடந்து கொள்வார் என்றே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
ரால் காஸ்ட்ரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்படட தலைவரும் அல்ல.பிடல் காஸ்ட்ரோவின் உடல் நலம் குறித்து எங்களிடம் எந்தத் தகவலும் இல்லை.அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்பது கூட எங்களுக்குத்தெரியாது என்றார் ஸ்னோ.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சீன் மெக்கோர்மக் கூறுகையில்,தற்போதைய சூழ்நிலை கியூபா மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கியூபாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால், அந்நாட்டு மக்கள் நீண்ட காலமாக போராடிவரும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அமெரிக்கா முடிந்தவரை அதற்கு உதவி செய்யும்என்றார்.
அமெரிக்காவின் நீண்ட கால எரிச்சலாக பிடல் காஸ்ட்ரோ இருந்து வருகிறார்.அவரைஆட்சியிலிருந்து அகற்றவும் கொலை செய்யவும் அமெரிக்கா கடந்த காலங்களில்கடுமையாக முயன்று தோல்வியைத் தழுவியுள்ளது.
![]() |
| பிடல் காஸ்ட்ரோ |
காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்களுக்கு இன்னமும் ஆயுத, பண உதவிகளை அமெரிக்காசெய்து வருகிறது. ஆனால் தனக்கு எதிராக போராடுபவர்களை ராணுவத்தைக்கொண்டு அடக்கி வருகிறார் பிடல்.
காஸ்ட்ரோவுக்கு எதிரான பல்வேறு அமைப்புகளுக்கு உதவுவதறகாக கடந்த 3வாரங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் புஷ், 80மில்லியன் டாலர் திட்டம் ஒன்றைஅறிவித்தார்.
பிடலுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி தோல்வியுற்ற எதிர்ப்பாளர்கள்கியூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில், குறிப்பாக, மியாமி நகரில் ஏராளமாகதஞ்சம் புகுந்துள்ளனர்.
இப்போது பிடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை இந்த மியாமிமாகாண கியூபா நாட்டினர் பட்டாசுகளை வெடித்தும், வீதிகளில் ஊர்வலமாக சென்றும்தண்ணி பார்ட்டி வைத்தும் கொண்டாடி வருகின்றனர்.
பிடல் காஸ்ட்ரோவுக்கு ஆகஸ்ட் 13ம் தேதி 80 வயது பிறக்கிறது. புதிதாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ள அவரது தம்பி ரால் காஸ்ட்ரோவுக்கு 75 வயதாகிறது.
உடல் நிலை தேறியவுடன் பிடலே மீண்டும் அதிபர் பொறுப்பை ஏற்பார் என்றுதெரிகிறது.















Click it and Unblock the Notifications