கலிபோர்னியாவில் சீக்கியருக்கு கத்திக் குத்து!
சாண்டாகிளாரா (கலிபோர்னியா):
அமெரிக்காவின், கலிபோர்னியா மாநிலம் சான்டா கிளாரா நகரில் இக்பால் சிங்(வயது40) என்ற சீக்கியரை தலிபான் தீவிரவாதி என்று தவறாகக் கருதப்பட்டுகத்தியால் குத்தப்பட்டார்.
சான்ஜோஸ் பகுதியில் உள்ள குருத்வாராவுக்குச் செல்வதற்காக தனது இரண்டரைவயது பேத்தியுடன் கார் பார்க்கிங் இடத்திற்கு வந்தார் சிங். குடும்பத்தில்மற்றவர்களும் வருவதற்காக அங்கு காத்திருந்தார்.அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், இக்பால் சிங்கை நெருங்கி, அவரது கழுத்தில்கத்தியால் குத்தினார். குத்தியவரின் பெயர் எவவெட் தாம்சன்.
20 வயது தாம்சனை போலீஸார் கைது செய்துள்ளனர். தலிபான் தீவிரவாதி எனஇக்பாலை நினைத்ததால் குத்தியதாக தாம்சன் கூறியுள்ளார்.
இத்தனைக்கும் தாம்சனின் பக்கத்துக்கு வீட்டில் தான் இக்பால் சிங் வசித்து வருகிறார்.இதனால் இந்தத் தாக்குதலுக்கு வேறு காரணம் இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கிறார்கள்.
தாம்சன் மீது கொலை முயற்சி மற்றும் இன துவேஷ குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து இக்பால் சிங்கின் மைத்துனர் குர்மீத் சிங் கூறுகையில்,
மதரீதியாகவோ அல்லது இனவெறி காரணமாகவோ இந்தத் தாக்குதல் நடந்திருந்தால்அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம், சீக்கியர்களை குறி வைத்துஅமெரிக்காவில் அதிக அளவில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
சீககியர்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியவில்லை. தீவிரவாதிகளுடன் தொடர்புஉடையவர்கள் என்றுதான் கருதுகிறார்கள். அதிலும் நியூயார்க் தீவிரவாததாக்குதலுக்குப் பிறகு எங்களுக்கு ஆபத்து அதிகரித்துவிட்டது.
எங்கலை தலிபான் தீவிரவாதிகளாக கருதுகிறார்கள் என்றார்.
செப்டம்பர்11 தாக்குதலுக்குப் பின்னர், அரிசோனாவின் மெசா நகரில் ஒரு சீக்கியர்படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவ்வப்போது சீக்கியர்கள் தாக்குதலுக்குஆளாகி வருகின்றனர்.
சீக்கியர்களின் டர்பன், தாடியை வைத்து தலிபான்கள் என நினைக்கும் அமெரிக்கர்கள்நிறைய பேர் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications