ஜெ மீது அரசு ஊழியர் சங்கங்கள் பாய்ச்சல்
சென்னை:
அரசு ஊழியர்கள் மீது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளது மிகவும் வேதனை அளிக்கிறது என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியதலைவர் கோ.சூரியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 31ம் தேதி சட்டசபையில் பேசியபோது ஒவ்வொருஒட்டுச் சாவடியிலும் மின்னணு இயந்திரத்தில் 30 முதல் 50 ஒட்டுகளை திமுகவுக்குஅரசு ஊழியர்கள் போட்டு விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளதை அறிந்து மிகவும்வேதனை அடைகிறோம்.
தேர்தல் ஆணையத்தின் ஆணைகளுக்கும், தேர்தல் விதிமுறைகளுக்கும் உட்பட்டுதான்ஒவ்வொரு அரசு ஊழியரும் தேர்தல் பணியினை செய்கிறார்கள். வாக்குச் சாவடியில்அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகளின் விழிப்பான கண்காணிப்புகளும் இடையில்தான் வாக்கு அளிக்கும் பணி நடைபெறுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில் இதுபோன்ற எவ்விதப் புகாரும் இல்லை. தேர்தல் பணிசெய்யும் அரசு ஊழியர்கள் முறையாகவும், சரியாகவும் செய்துள்ளார்கள் என்பதுதெளிவாகியுள்ளது. தேர்தல் முடிந்து இவ்வளவு காலம் கழித்து இவ்வாறானஅபாண்டமான குற்றச்சாட்டினை சுமத்துவது மிகவும் வினோதமாக இருப்பதுடன்,நெருப்பிலிட்ட புழுவாக அரசு அலுவலர்களை துடிக்க வைத்துள்ளது.
அரசியல் கட்சி கண்ணோட்டத்தின் அடிப்படையில் எந்த முடிவையும் நாங்கள்எடுப்பதில்லை. அரசு ஊழியர்களின் நலன்களை பாதுகாத்திட எடுக்கப்படும் சங்கநடவடிக்கைகளை விரோதமாக எடுத்துக்கொள்ளாமல் சுமூகமாக தீர்த்து வைத்திடவேண்டியது அரசின் கடமையாகும்.
அரசு நிர்வாகத்தின் நம்பகத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் முன்னாள்முதல்வர் இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசு நிர்வாகத்திற்கு மிகுந்த ஆபத்தினைவிளைவிக்கும். இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
பொது மக்களில் ஒர் அங்கம் என்ற வகையில் தான் அரசு ஊழியர்களும், அவர்களதுகுடும்பத்தினரும் தேர்தலில் வாக்களித்துள்ளனர். விரும்பும் கட்சிக்கு வாக்களிப்பதுஅவர்களின் தனி மனித ஜீவாதார உரிமையாகும். ஆனால் வாக்குச் சாவடியிலோ,தேர்தல் பணிகளிலோ எந்தவித தவறும் அரசு ஊழியர்கள் செய்ய இயலாது.
தேர்தல் நடைமுறைகளின்படியும் தொழில்நுட்பரீதியிலும் அதற்கு வாய்ப்பே இல்லைஎன்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். ஜெயலலிதாவின் குற்றச்சாட்டைவன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்க தலைவர் பாண்டுரங்கன் விடுத்துள்ளஅறிக்கையில்,
அரசு ஊழியர், ஆசிரியர் சமுதாயத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும், பெருமைக்கும்களங்கம் கற்பிக்கும் வகையில் தமிழகத்தை 10 ஆண்டுகள் ஆட்சி புரித்த முன்னால்முதல்வர் கொஞ்சம் கூட பொறுப்பில்லாத அரசியல்வாதியைப் போல அரசுஊழியர்கள் மீது சேற்றினை வாரி இறைத்திருக்கிறார்.
மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல் அரசு ஊழியர்கள் மீது பழியைப் போடுவதுஅரசியல் நாகரிமாகக் கருத முடியாது என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக சிறப்புத் தலைவர் டி.சுப்பிரமணியம் விடுத்துள்ளஅறிக்கையில்,
ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் வழி தவறி சென்று விட்ட சிறுபிள்ளைகள்என சித்தரித்துள்ளதும், திமுக கூட்டணிக்கு சாதகமாக ஒட்டுப்போட்டு விட்டனர்என்றும் முன்னாள் முதல்வர் குறிப்பிடுவதும், மக்கள் அளித்த தீர்ப்பிற்கும், தேர்தல்ஆணையத்தின் நேர்மைக்கும் எதிரானதாகும்.
இந்த குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணையை மேற்கொண்டுநடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து அரசு ஊழியர் ஒருஙகிணைப்பு குழு தலைவர் சுப.சீத்தாராமன் விடுத்துள்ளஅறிக்கையில்,
ஜெயலலிதா கூறியபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முடிவு எடுத்திருந்தால் அவரதுகட்சி ஒரு இடத்தில் கூட தேறியிருக்காது. அவர் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்குஊட்டிய விஷத்தின் கொடுமையை முதல்வர் கருணாநிதி தான் போக்கி நல்லநிலைக்கு திருப்ப முடியும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications