விஜய்காந்த் தேறிட்டார்-கருணாநிதி புகழ்ச்சி
சென்னை:
அரசியல் அரிச்சுவடியில் விஜய்காந்த் தேர்வு ஆகி விட்டார் விஜய்காந்த்த எனமுதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கை:கேள்வி: மைனாரிட்டி திமுக அரசு என்று அதிமுக தலைவி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாரே?
பதில்: அதற்குத் தான் நிதி அமைச்சர் பேராசிரியர் சட்டமன்றத்திலேயே சுடச்சுடப்பதில் கொடுத்து, தெம்பும், தைரியமும் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என்று அறை கூவல் விடுத்திருக்கிறாரே.
கேள்வி: திமுக தலைவர்களில் சில பேர் இந்தி படிக்காததால் தான், டெல்லியில் மந்திரிபதவி கிடைக்கும் வாய்ப்பை இழந்ததாக புலம்புகிறார்கள் என்று விஜய்காந்த்பேசியிருக்கிறாரே?
பதில்: அப்படியானல் இப்போது மத்திய அமைச்சரவையில் இருக்கும்தமிழ்நாட்டுக்காரர்கள் அனைவரும் இந்தி படித்தவர்கள் என்று அவர் நிரூபிக்கத்தயாராக இருக்கிறாரா? வளர வேண்டிய ஒருவர் புலம்புகிறார்கள் என்பது போன்றவசைமொழிகளை தவிர்ப்பது நல்லது.
கேள்வி: ஏழை விவசாயிக்கு திமுக ஆட்சி 2 ஏக்கர் தரிசு நிலம் தருவதாகஅறிவித்திருப்பது உள்ளாட்சி தேர்தலுக்காத்தான் என்று விஜய்காந்த்கூறியிருக்கிறாரே?
பதில்: வழங்காமலிருந்தால் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்பார்கள். வழங்கத்தொடங்குகிறோம் என்றதும் எல்லாம் தேர்தலுக்காக என்கிறார்கள். பரவாயில்லை.அரசியல் அரிச்சுவடியில் தேர்வு ஆகி விட்டார்.
கேள்வி: தமிழக அரசால் புதிதாக வழங்கப்படவுள்ள கலர் டிவி தரமாக இருக்காதுஎன்கிறாரே ஜெயலலிதா?
பதில்: கலர் டிவி வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவுடன்,அது போலியான திட்டம் என்றும், நிறைவேற்ற இயலாதென்றும், திமுக மக்களைஏமாற்றுகின்றது என்றும் ஊருக்கு ஊர் பிரசாரம் செய்தார்.
தேர்தல் முடிந்த பிறகு நாம் அந்த திட்டத்தை அமுல்படுத்த முன் வராமல்இருந்திருந்தால் பார்த்தீர்களா திமுக ஏமாற்றி விட்டது. தேர்தல் அறிக்கையில்சொன்னார்கள், நிறைவேற்ற முன் வரவில்லை என்று கூறியிருப்பார். ஆனால் திமுகஅரசு அதற்கான திட்டங்களை இரண்டரை மாதங்களில் நிறைவேற்ற முன் வந்ததும்வேறு என்ன தான் சொல்ல முடியும்?
கலர் டிவிகள் தரமாக இருக்காது என்று இப்போதே, அது எப்படியிருக்கும் என்றுதெரியாத நிலையில், அறிக்கை விட்டுள்ளார்.
கேள்வி: ஏன் 21 அங்கும் கலர் டிவி வழங்கவில்லை, 14 அங்குல டிவி தானேவழங்குகிறீர்கள் என்று புகார் கூறுகிறாரே ஜெயலலிதா?
பதில்: 21 அங்குல டிவி வழங்குவதாக எங்கே எப்போது சொன்னோம்? கலர் டிவிவழங்குவதாகத்தான் சொன்னோம். தற்போது வழங்கப் போகிறோம். 21 அங்குல டிவிவழங்கினால் ஏன் 42 அங்குல டிவி வழங்கவில்லை என்பார்.
வழங்கப்படும் டிவிகளுக்கு இரண்டாண்டு உத்தரவாதம் உண்டு. ஏழை நடுத்தரவகுப்பு மக்களுக்குத்தான் இந்த டிவிகள் வழங்கப்படவுள்ளது. குடிசை வீட்டில்வாழ்பவர்கள் 14 அங்குல டிவிகளை வீட்டிலே வைத்து பார்க்க முடியும். ஜெயலலிதாபோல மாளிகையிலே இருப்போருக்குத்தான் 21 அங்குல டிவி வேண்டும்.
கேள்வி: திருமண நிதி உதவித் திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்தான்ஒதுக்கப்பட்டுள்ளது போதுமானதாக இல்லை என்று அறிக்கை விடுத்திருக்கிறாரேஜெயலலிதா?
பதில்: ஏழை பெண்கள் திருமண நிதி உதவித் திட்டத்திற்கே மூடு விழா நடத்தியவர்.எந்த முகத்தை வைத்துக் கொண்டு அத்திட்டத்திற்கு நிதி உதவி போதுமானதாகஇல்லை என்கிறாரோ?
கேள்வி: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஜெயலலிதாஆட்சியை விட திமுக அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: பேரவையிலே பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை இந்த அரசு கைவிட்டுவிட்டதாக ஜெயலலிதா பேசினார். நிதியமைச்சர் குறுக்கிட்டு அந்த திட்டம்கைவிடப்படவில்லை, தொடருகிறது என்று பதில் அளித்தார். தற்போது அந்ததிட்டத்தற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதாக அறிக்கை விடுத்துள்ளார்.இதுவும் உண்மை அல்ல.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications