கோவை- இலங்கை போலீசார் வெளியேற்றம்:விசி, மதிமுகவுடன் அதிமுகவும் வெளிநடப்பு
சென்னை:
கோவையில் பயிற்சி பெற வந்த இலங்கை போலீஸார் நேற்று இரவே அங்கிருந்துவெளியேற்றப்பட்டு விட்டதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி மையத்தில் இலங்கையைச்சேர்ந்த 45 போலீஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையைஎழுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் இதற்கு கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.இது குறித்து சட்டசபையில் இனறு பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பிரச்சினை எழுப்பின.
விடுதலைச் சிறுத்தைகள் உறுப்பினர் செலவம் பேசுகையில, நூற்றுக்கணக்கானதமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்து வரும் நிலையில், அந்தநாட்டவருக்கு இங்கு போர் சார்ந்த பயிற்சியை அளிப்பது தமிழ் மக்களுக்குஎதிரானது. இதனால் தமிழர் நெஞ்சம் கொதிப்படைந்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இது குறிதது பேசிய முதல்வர் இந்த பிரச்சினைசட்டசபையில் எழுப்பப்பட்டு விட்டதால் மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் எனநம்புவதாக தெரிவித்தார். ஆனால் முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளிக்காமலும்,தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமலும், அஙகு தொடர்ந்து பயிற்சிஅளிக்கப்படுகிறது என்றார்.
இதேபோல பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்சிவபுண்ணியம் ஆகியோரும் பேசினர்.
அவர்களுக்குப் பதில் அளிதது முதல்வர் கருணாநிதி பேசுகையில, இந்தப் பிரச்சினைஅலட்சியப்படுத்தக்கூடியதல்ல என்பதை நானும் அறிவேன். இது தொடர்பாகவிரிவாக விளக்கம் அளிததுள்ளேன்.
அங்கே பயிற்சி பெறுவது ராணுவம் அல்ல போலீஸ் தான் என்றும் கூட்டத்தைக்கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சிதான் அது என்றும் விளககம்அளிக்கப்படுகிறது.
இந்த சந்தேகத்தை போக்க வேண்டிய, தமிழ் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியபெறும் பொறுப்பு தமிழக அரசுக்கு மாத்திரமல்ல, மத்திய அரசுக்கும் உண்டு.
தமிழர்கள் எங்கே தாக்கப்பட்டாலும், தமிழர்கள் வேதனைப்படுவதும், கலங்கிநிற்பதும் இயல்புதான். இந்த பயிற்சி குறிதது நாம் அனைவருமேவருத்தப்படுகிறோம், வேதனைப்ப்டுகிறோம்.
வெறும் காவல்துறை பயிற்சிதான் என்றாலும் கூட இப்போது இது தேவையாஎனபதை இலங்கை அரசும், இந்திய அரசும் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த1980ம் ஆண்டு நான்முதல்வராக இருந்தபோது, அப்போதயை பிரதமர் ராஜீவ்காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
அப்போது நாங்கள் இருவரும் நடத்திய உரையாடலின் முடிவு, வெற்றிகரமாகஇருந்திருந்தால், இலங்கை பிரச்சினையே நல்லவிதமாக முடிந்திருக்கும்.
கோவையில் பயிற்சி பெற வந்த இலங்கை போலீஸார் குறித்த தகவலை கடந்த 2ம்தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்குஎடுத்துரைத்தார்.
3ம் தேதி (நேற்று) இது தொடர்பாக மத்திய உள்துறைச் செயலாளருக்கு கடிதம் ஒனறும்அனுப்பப்ப்ட்டது.
இதையடுத்து கோவையில் பயிற்சி பெற்று வந்த இலங்கை காவலர்கள் அனைவரும்நேற்று இரவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர் என்று கூறினார்கருணாநிதி.
இதை உறுப்பினர்கள அனைவரும் மேசைகளைத் தட்டி வரவேற்றனர்.
இருப்பினும், சிங்கள போலீஸார் தமிழக மண்ணில் பயிற்சி பெற அனுமதி கொடுத்தமத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறி விடுதலைச் சிறுததைகள்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து மதிமுகவும் வெளிநடப்புபு செய்தது.
அப்போது அதிமுக கொறடா செங்கோட்டையன் எழுந்து, மத்திய அரசு பயிற்சிஅளிக்க அனுமதி தந்தது என்றால் இதுகுறித்து மத்திய அரசில் அங்கம் வகிக்கும்திமுகவுக்கு தெரியுமா, தெரியாதா?
மாநில முதல்வருக்கு இது பற்றிக் கூட தெரியாதா என்று கூறி அதனைக் கண்டித்துவெளி நடப்புச் செய்வதாக அறிவித்தார். பின்னர் அதிமுகவினரும் வெளிநடப்புசெய்தனர்.
அதிமுகவின் இந்த திடீர் வெளிநடப்பை காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட்ஆகிய கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
விடுதலைப் புலிகளுக்கு எதிராந போக்கு கொண்ட அதிமுக இப்போது திடீர் பாசம்வந்து வெளிநடப்புச் செயவதாக இந்தக் கட்சிகளின் உறுப்பினர்கள் விமர்சித்தனர்.
இதுகுறித்து கருணாநதி குறிப்பிடுகையில், சிறுத்தைகளின் சீற்றத்துக்குப் பிறகுதிடீரென ஒரு உணர்வு ஏற்பட்டு அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் வெளிநடப்புச் செய்து விட்டு இவர்களைப் பார்க்க, இவர்கள்அவர்களைப் பார்க்க நீங்கள் வெளிநடப்பு செய்தபோதெல்லாம் நாங்கள் உங்கள்பின்னால் வந்தோமே, இபபோது நீங்கள் பேசாமல் அமர்ந்திருக்கிறீர்களே என்றுஅவர்கள் மெளன பாஷையில், பேசியதை நான் அறிவேன.
எனவே அதிமுகவினர் வெளிநடப்பு ஒரு வேடிக்கையான வெளிநடப்பு.அதேசமயத்தில விடுதலைச் சிறுத்தைளின் வெளிநடப்பு உணர்வுப்பூர்வமானதுஎன்பதையும் அறிவேன. அதை பழிததோ, இழிததோ கூற விரும்பவில்லை எனறார்கருணாநிதி.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications