பெரியார் பிறந்த நாள் முதல் தரிசு நில வினியோகம்: கருணாநிதி
சென்னை:
தந்தை பெரியார் பிறந்த நாள் முதல் ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நில வினியோகம்தொடங்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும்பட்ஜெட் விளக்கக் கூட்டம் சிந்தாதிரிப்பேட்டையில் நடந்தது. இதில் கருணாநிதிபேசுகையில்,தரிசு நிலத்தை மேம்படுத்தி எப்படி வழங்குவது என்ற முறையைக் கண்டறிய நிலவினியோகத்திற்கு பெயர் பெற்ற மேற்கு வங்க அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.
எனவே தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு விரைவில் கொல்கத்தாசெல்கிறது. 2 ஏக்கர் இலவச தரிசு நிலம் தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர்17ம் தேதி முதல் வழங்கப்பட தொடங்கும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகஉறுதியளிக்கிறேன்.
2 ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறோம். கலர் டிவி இல்லாத வீடுகளுக்கு டிவிகொடுப்பதற்காக ரூ. 750 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம்.
இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து தரிசு நிலமும் வழங்கப் பாகிறோம். 20 மணிநேநரம் உழைத்ததாக முன்னாள் முதலவர் ஜெயலலிதா அடிக்கடி கூறுவார்.
அவர் எப்படி உழைத்தார் என்பதைப் பார்க்கத்தான் எங்களை மக்கள் ஆட்சிப்பொறுப்புக்கு அனுப்பியுள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரதுபார்வைக்கு அனுப்பப்பட்ட 1,112 கோப்புகளை கையெழுத்தே போடாமல் திருப்பிஅனுப்பி வைத்துள்ளார்.
சுனாமி நிவாரண நிதிக்காக உலக வங்கியிடமிருந்து கடன், மானியம் ஆகியவற்றைப்பெறுவது தொடர்பான கோப்பில் 1.7.2005 வரை ஜெயலலிதாகையெழுத்திடவில்லை. அதிகாரிகளே அரசு ஆணையைப் பிறப்பிதது வந்துள்ளனர்.
கடைசி வரை இந்தக் கோப்பில் கையெழுத்தே போடாமல் இருந்து நான் முதல்வரானபிறகு அந்தக் கோப்பு என்னிடம் வந்தது. அதில் நான் தான் கையெழுத்திட்டேன்என்றார் கருணாநிதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications