இலங்கை ராணுவம் மீண்டும் தாக்குதல்-15தமிழர்கள் பலி-மயிரிழையில் தப்பிய நார்வே தூதர்
கொழும்பு:
திரிகோணமலை மாவட்டம் மாவிலாறு தடுப்பணையின் மதகுகளை திறக்கவிடுதலைப் புலிகள் சென்றபோது அவர்கள் மீது இலங்கை ராணுவம் பீரங்கித் தாக்குல்நடத்தியது. இதில் அப்பாவித் தமிழர்கள் 15 பேர் பலியாயினர். சமாதான முயற்சியில்ஈடுபட்டுள்ள நார்வே தூதர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இதற்கு புலிகள் தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவிலாறுதடுப்பணையிலிருந்து சிங்கள கிராமங்களுக்குச் செல்லும் மதகுகளை விடுதலைப்புலிகள் மூடியதால், இலங்கை ராணுவம் கடும் தாக்குதலைத் தொடங்கியது.விடுதலைப் புலிகளும் கடுமையான பதிலடி கொடுத்தனர். இதனால் மாவிலாறுஅணைப் பகுதிக்கு இலங்கை ராணுவம் நெருங்கடியவிலலை. இரு தரப்பிலுமபெருமளவு உயிர்ச சேதம் ஏற்பட்ட நிலையில் விடுதலைப் புலிகளின அரசியல்பிரிவுத் தலைவர் தமிழ்ச செல்வனை நார்வே தூதர் ஜோன் ஹென்ஸ்சென் பேயர் சந்தித்துப்பேசினார்.
அப்போது போர் நிறுத்தத்திற்குத் தயார், ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு,மருந்து தரவேண்டும் என்று புலிகள் நிபந்தனை விதித்தனர். இந்த நிபந்தனையைஇலங்கை அரசு ஏற்கவில்லை.
இந் நிலையில், மாவிலாறு அணைப் பகுதிக்கு விடுதலைப் புலிகள் குழு செந்றது.அங்கு அடைக்கப்பட்ட மதகினை திறக்க அவர்கள் சென்றனர். ஆனால் இலங்கைராணுவம் அவர்கள் மீது பீரங்கித் தாக்குதலை நடத்தியது.
இதையடுத்து புலிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பீரங்கிக் குண்டுகள் நார்வேதூதுக் குழுவினர் இருந்த பகுதியிலும வந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் அதிர்ஷ்டவசமசாக அவர்கள் உயிர் தப்பினர்.
ராணுவத்தின் இந்தத் தாக்குதலுக்கு புலிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அரசின் அனுமதியைப்பெற்றுத்தான் மதகை திறக்கச் சென்றோம். ஆனால் எங்கள் மீது100 குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது ராணுவம்.
இந்தத் தாக்குதல் தொடருமானால் நாங்களும் முழு அளவிலான போரைத்தொடங்குவோம். அணையைத் திறக்க நாங்கள் தயாராகேவ இருக்கிறோம். ஆனால்ராணுவம்தான் தடுக்கிறது. மூதூரில் முஸ்லீம் அகதிகளை நாங்கள் கொல்லவில்லைஎன்று புலிகளின் செய்தித் தொடர்பாளர் புலித்தேவன் கூறியுள்ளார்.
அமைதிக் கண்காணிப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஓமர்சன் கூறுகையில்,
மதகுகளை திறக்க புலிகள் ஒப்புக் கொண்ட பின்னரும், அவர்கள் மீது தாக்குதல்நடத்தியுள்ளது அரசு. இதன் மூலம் நீரைப் பெறுவதில் அரசாங்கத்துக்குஅக்கறையில்லை என்பது தெளிவாகிறது. புலிகளின் மனிதாபிமான செயலைசீர்குலைக்க அரசு முயன்றுள்ளது. இந்த விஷயத்தில் தவறு அரசின் மீது தான் என்றார்.
கண்ணி வெடி-சிங்கள போலீஸ் அதிகாரி பலி:
இதற்கிடையே கண்டி மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கி உயர் போலீஸ் அதிகாரி உபுல் செனிவர்த்தனே பலியானார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications